சபரிமலை சீராய்வு மனுக்களை உடனடியாக விசாரிக்க முடியாது: உச்ச நீதிமன்றம் திட்டவட்டம்

சபரிமலை தொடர்பான சீராய்வு மனுக்களை உடனடியாக விசாரிக்க முடியாது என்றும் ஏற்கனவே கூறியது போல் ஜனவரி 22ம் தேதி அனைத்து வழக்குகளும் விசாரிக்க முடியும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
 | 

சபரிமலை கோவிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஆனால், இதற்கு ஐயப்ப பக்தர்கள் எதிர்ப்பு தெரிவித்து கோவிலுக்கு வரும் பெண்களை தடுத்து வருகின்றனர். அதே நேரத்தில் பெண்களை எப்படியாவது கோவிலுக்கு செல்ல வைக்க கேரள அரசு முயற்சித்து வருகிறது. 

கார்த்திகை மாத மண்டல பூஜைக்காக ஐயப்பன் கோவில் திறக்கப்பட்டுள்ளதை அடுத்து, அங்கு கேரள போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பெண்களை செல்ல தடுக்கும் இந்து அமைப்பினரை போலீசார் கைது செய்து வருகின்றனர். 

இந்த சூழ்நிலையில், சபரிமலை விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை செயல்படுத்த கால அவகாசம் தேவை என தேவசம் போர்டு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யவுள்ளது. 

இந்நிலையில் சீராய்வு மனுக்களை வழக்கினை உடனடியாக விசாரிக்க நீதிபதிகள் இன்று மறுப்பு தெரிவித்துள்ளனர். சபரிமலை தொடர்பான சீராய்வு மனுக்களை உடனடியாக விசாரிக்க முடியாது . ஏற்கனவே கூறியது போல் ஜனவரி 22ம் தேதி அனைத்து வழக்குகளும் விசாரிக்க முடியும் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP