தேசதுரோக வழக்கு: முக்கிய குற்றவாளியாக மாணவர் கன்னையா குமார்!

டெல்லி ஜேஎன்யு பல்கலை. வளாகத்தில் நடைபெற்ற கண்டன கூட்டத்தில், தேசத்துக்கு எதிரான கோஷங்களை எழுப்பியது தொடர்பான வழக்கின் குற்றப்பத்திரிகையில், மாணவர் கன்னையா குமார் உள்ளிட்ட 10 பேர் பிரதான குற்றவாளிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.
 | 

தேசதுரோக வழக்கு: முக்கிய குற்றவாளியாக மாணவர் கன்னையா குமார்!

டெல்லி ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்ற கண்டன கூட்டத்தில், தேசத்துக்கு எதிரான கோஷங்களை எழுப்பியது தொடர்பான வழக்கில், டெல்லி போலீஸார் இன்று நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.

இதில், இப்பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் கன்னையா குமார், உமர் காலித் உள்ளிட்ட 10  பேர் பிரதான குற்றவாளிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.

நாடாளுமன்றத்தின் மீது கடந்த 2001 -ஆம் ஆண்டு பயங்கரவாதிகள் தாக்கல் நடத்தினர். உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய இச்சம்பவத்தில் முக்கிய குற்றவாளிகளான அப்சல் குரு மற்றும் மெக்பூல் பத் தூக்கிலிடப்பட்டதை கண்டித்து, கடந்த 2016 பிப்ரவரி  -ஆம் தேதி, டெல்லி, ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழக வளாகத்தில் கூட்டம் நடைபெற்றது. 

பல்கலைக்கழக மாணவர் சங்கத் தலைவர் கன்னையா குமார் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், தேசத்துக்கு எதிராகவும் ,இந்திய ராணுவத்துக்கும் எதிராகவும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

இதையடுத்து, கன்னையா குமார் உள்ளிட்டோர்  தேசதுரோக வழக்கில் கைது செய்யப்பட்டனர். பின்னர்  அவர்களுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.

இந்த நிலையில், டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் இந்த வழக்கில், டெல்லி போலீஸார் இன்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர்.

1,200 பக்கங்கள் கொண்ட இக்குற்றப்பத்திரிகையில் கன்னையா குமார்,  உமர் காலித்  உள்ளிட்ட 10 பேர் இவ்வழக்கில் பிரதான குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்களில் 7 பேர் காஷ்மீரை சேர்ந்த பல்கலைக்கழக மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய தண்டனைவியல் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின்கீழ் மாணவர்களின் மீது பதிவு செய்யப்பட்டுள்ள இவ்வழக்கு தொடர்பாக விசாரிக்கப்பட்ட மேலும் 36 மாணவர்களின் பெயர்களும், குற்றப்பத்திரிகையின் 12 -ஆவது பத்தியில் இடம்பெற்றுள்ளது.

இதில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் டி.ராஜாவின் மகள் அபராஜிதாவின் பெயரும் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP