சீக்கியர் கலவர வழக்கு- சஜ்ஜன் குமாரின் மனுவுக்கு விளக்கமளிக்க நோட்டீஸ்

சீக்கியர்களுக்கு எதிரான கலவர வழக்கில் ஆயுள் தண்டனை விதித்து சிறையில் அடைக்கப்பட்டுள்ள காங்கிரஸ் தலைவர் சஜ்ஜன் குமார் முறையீட்டு மனு தொடர்பாக சி.பி.ஐ.க்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
 | 

இந்தியாவின் முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி டெல்லியில் உள்ள தனது வீட்டில் சீக்கிய பாதுகாவலர்களால் துப்பாக்கியால் சுடப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்.

இந்த படுகொலைக்குப்பிறகு சீக்கியர்களுக்கு எதிராக நாடு முழுவதும் வன்முறை வெறியாட்டங்கள் நடந்தன. இதில் 2 ஆயிரத்து 800 சீக்கியர்கள் பலியாயினர்.

இந்நிலையில்,  இந்த கலவர வழக்கில் இருந்து நிரபராதி என்று விடுவிக்கப்பட்ட டெல்லி முன்னாள் காங்கிரஸ் தலைவர் சஜ்ஜன் குமாருக்கு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 17-ம் தேதி ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இதைதொடர்ந்து அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

ஆயுள் தண்டனைக்கு எதிராக சஜ்ஜன் குமார் உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்தார். இந்த மனு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதி அசோக் பூஷன்,  நீதிபதி எஸ்.கே.கவுல் ஆகியோரை கொண்ட அமர்வின் முன் இன்று விசாரணைக்கு வந்தது. மனுதாரரின் கோரிக்கை தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு  சி.பி.ஐ.க்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 

newstm.in
 
newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP