தலைமை நீதிபதி மீதான பாலியல் புகார் தள்ளுபடி

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் மீதான பாலியல் புகார் அடிப்படை ஆதாரமற்றது என்பதால், அதனை தள்ளுபடி செய்வதாக சிறப்பு விசாரணைக் குழு இன்று அறிவித்துள்ளது.
 | 

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் மீது, நீதிமன்ற முன்னாள் பெண் ஊழியர்  ஒருவர் அண்மையில் பாலியல் புகார் அளித்திருந்தார். நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த புகார் குறித்து விசாரிக்க, நீதிபதி பாப்டே தலைமையில் மூன்று பேர் கொண்ட சிறப்புக் குழுவை அமைத்து தலைமை நீதிபதி உத்தரவிட்டார்.

பெண் நீதிபதிகளான இந்திரா பானர்ஜி, இந்து மல்கோத்ரா ஆகியோர் இடம்பெற்றிருந்த சிறப்புக் குழு, தலைமை நீதிபதி மீதான பாலியல் புகார் குறித்து விசாரணை மேற்கொண்டு வந்தது.

இந்த நிலையில், அந்த புகாரில் எவ்வித அடிப்படை ஆதராமும் இல்லை என்பதால்,  நீதிமன்ற முன்னாள் பெண் ஊழியர் தாக்கல் செய்திருந்த புகாரை தள்ளுபடி செய்வதாக, சிறப்பு விசாரணைக் குழு இன்று அறிவித்துள்ளது. மேலும்  இந்தக் குழு மேற்கொண்ட விசாரணை விவரங்கள் பொதுவெளியில் வெளியிடப்படாது எனவும் இக்குழு அறிவித்துள்ளது.

newstm.in
 
newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP