எஸ்.சி., எஸ்.டி சட்டம்: 3 நீதிபதிகள் அமர்வு அறிவிப்பு

எஸ்.சி., எஸ்.டி வன்கொடுமை தடுப்பு சட்டம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ள 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு நியமிக்கப்பட்டுள்ளது.
 | 

எஸ்.சி., எஸ்.டி சட்டம்: 3 நீதிபதிகள் அமர்வு அறிவிப்பு

எஸ்.சி., எஸ்.டி வன்கொடுமை தடுப்பு சட்டம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ள 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு நியமிக்கப்பட்டுள்ளது. 

எஸ்.சி., எஸ்.டி., பிரிவினர்களுக்கு பாதுகாப்பு வழங்கும் சட்டமாக இந்த வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளது. இருப்பினும், சிலர் தனிப்பட்ட பகைமைகளை தீர்த்து கொள்வதற்கு இந்த சட்டத்தை தவறாக பயன்படுத்தப்படுத்துவதாக எழுந்த புகாரை தொடர்ந்து கடந்த ஆண்டு இந்த சட்டத்தில் சில மாற்றங்கள் கொண்டுவரப்பட்டன. 

அதில், வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்படும் வழக்குகளுக்கு உடனடி கைது நடவடிக்கை நீக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பலர் வழக்கு தொடர்ந்து நிலையில், இந்த வழக்குகள் குறித்து விசாரணை மேற்கொள்ள புதிய அமர்வு நியமிக்கப்பட்டுள்ளது.  நீதிபதிகள்  அருண்மிஸ்ரா, எம்.ஆர்,ஷா, கார்வி ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த மனுக்களை விசாரிக்கும் என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. 

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP