மோடியை திருடன் எனச் சொன்ன விவகாரம்: ராகுலுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்!

ரஃபேல் வழக்கு குறித்து உச்சநீதிமன்ற உத்தரவில் இல்லாத விஷயத்தை பேசியதன் மூலமாக, நீதிமன்றத்தை ராகுல் காந்தி அவமதித்துவிட்டார் என்று பாஜக குற்றம்சாட்டியது. அதுகுறித்து ராகுலுக்கு நோட்டீஸ் அனுப்ப உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 | 

மோடியை திருடன் எனச் சொன்ன விவகாரம்: ராகுலுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்!

ரஃபேல் ஒப்பந்த வழக்கில், பிரதமர் நரேந்திர மோடியை சர்ச்சைக்குரிய வகையில் விமர்சித்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

ரஃபேல் ஒப்பந்தம் குறித்த வழக்கை மறுவிசாரணை செய்ய உச்சநீதிமன்றம் கடந்தவாரம் ஒப்புக் கொண்டது. பத்திரிகைகளில் வெளியான ஆவணங்கள் பரிசீலிக்கப்படும் என்று உச்சநீதிமன்றம் கூறியிருந்தது.

இதுதொடர்பாக தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் ராகுல் காந்தி பேசும்போது, மோடியை திருடன் என்று உச்சநீதிமன்றமே சொல்லிவிட்டது என்றார். ஆனால், உச்சநீதிமன்ற உத்தரவில் இல்லாத விஷயத்தை பேசியதன் மூலமாக, நீதிமன்றத்தை ராகுல் காந்தி அவமதித்துவிட்டார் என்று பாஜக குற்றம்சாட்டியது. இதுதொடர்பாக அக்கட்சியின் மூத்த தலைவர் மீனாட்சி லேகி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.

மோடியை திருடன் எனச் சொன்ன விவகாரம்: ராகுலுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்!

அந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தெரிவித்துள்ள குற்றச்சாட்டு குறித்து விளக்கம் அளிக்குமாறு ராகுல் காந்திக்கு நோட்டீஸ் அனுப்ப உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

newstm.in
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP