ப.சிதம்பரத்தின் முன் ஜாமீன் மனு தள்ளுபடி: உச்ச நீதிமன்றம்

ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேட்டில் ப.சிதம்பரம் தொடர்ந்த முன் ஜாமீன் மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
 | 

ப.சிதம்பரத்தின் முன் ஜாமீன் மனு தள்ளுபடி: உச்ச நீதிமன்றம்

ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேட்டில் ப.சிதம்பரம் தொடர்ந்த முன் ஜாமீன் மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் ப.சிதம்பரம் முன்ஜாமீன் கோரி டெல்லி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்தது. இதையடுத்து கடந்த 21ஆம் தேதி ப.சிதம்பரம் சிபிஐயால் கைது செய்யப்பட்டார். இந்நிலையில், டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்த உத்தரவை எதிர்த்து ப.சிதம்பரம் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த போது, ப.சிதம்பரம் சிபிஐயால் கைது செய்யப்பட்டதால், முன்ஜாமீன் மனு கலாவதியாகிவிட்டது எனக் கூறி உச்ச நீதிமன்றம் இந்த மனுவை தள்ளுபடி செய்தது. மேலும் வழக்கு விசாரணை நடைபெறும் கீழமை நீதிமன்றத்தில் ஜாமீன் கோரலாம் என நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. 

newstm.in

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP