சபரிமலை வழக்கு தீர்ப்பு : 7 பேர் கொண்ட அரசியல் சாசன அமர்விடம் ஒப்படைக்கப்பட்டது ஏன்??

கேரள மாநிலம், சபரி மலை ஐயப்பன் கோயில் வழக்கின் மறுஆய்வு மனுக்களுக்கான விசாரணையில் இன்று தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், இந்த வழக்கை 7 பேர் கொண்ட அமர்விற்கு மாற்றியிருப்பதோடு, அதற்கான தீர்ப்பு வழங்கப்படும் வரை வயது வரம்பின்றி பெண்கள் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் செல்லலாம் என்றும் குறிப்பிட்டுள்ளது.
 | 

சபரிமலை வழக்கு தீர்ப்பு : 7 பேர் கொண்ட அரசியல் சாசன அமர்விடம் ஒப்படைக்கப்பட்டது ஏன்??

கேரள மாநிலம், சபரி மலை ஐயப்பன் கோயில் வழக்கின் மறுஆய்வு மனுக்களுக்கான விசாரணையில் இன்று தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், இந்த வழக்கை 7 பேர் கொண்ட அமர்விற்கு மாற்றியிருப்பதோடு, அதற்கான தீர்ப்பு வழங்கப்படும் வரை வயது வரம்பின்றி பெண்கள் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் செல்லலாம் என்றும் குறிப்பிட்டுள்ளது. 

இந்த வழக்கின் விசாரணையில் ஈடுபட்டிருந்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான 5 பேர் கொண்ட அரசியல் சாசன அமர்வு, இதனை 7 பேர் கொண்ட அமர்விற்கு பரிந்துரைத்தது ஏன் என்ற கேள்வி அனைவரின் மனதிலும் எழுந்துள்ளது. அதற்கான காரணங்களை தற்போது பார்க்கலாம். 

தற்போது இந்த வழக்கின் விசாரணையை மேற்கொண்டிருந்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான அரசியல் சாசன அமர்வில், தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் உட்பட, நீதிபதிகளான ஏ.எம்.கன்வில்கார், இந்து மல்ஹோத்ரா, ஆர்.எப்.நாரிமன் மற்றும் டி.ஒஸ்.சந்திரசூட் ஆகியோர் இருந்தனர். 

இதில் நீதிபதிகள் ரஞ்சன் கோகாய், ஏ.எம்.கன்வில்கார், மற்றும் இந்து மல்ஹோத்ரா ஆகிய மூவரும், இந்திய அரசியல் சட்டம் 25ன் படி, மதம் என்பது ஆண் பெண் ஆகிய இருதரப்பினருக்கும் பொதுவானது என்பதால், அதை அவர்கள் பின்பற்றுவதற்கு தடை விதிப்பது சரியில்லை என்பதால், சபரிமலையில் பெண்களை அனுமதிக்கலாம் என்ற கருத்தை வெளிப்படுத்தியுள்ளனர். 

ஆனால், மற்ற இரண்டு நீதிபதிகளும், பல நூற்றாண்டுகளாக பின்பற்றப்பட்டு வரும் ஒரு முறையை மாற்றியமைப்பது தேவையற்றது என்பதால், 10 முதல் 50 வயது வரையிலான பெண்களை சபரிமலையில் அனுமதிக்க வேண்டாம் என்ற கருத்தை முன் வைத்துள்ளனர். 

உச்ச நீதிமன்றத்தின் இன்றைய தீர்ப்பு அயோத்தியா வழக்கை போல ஒருமித்த கருத்தாக அமைய பெற்றிருக்கவில்லை. 3:2 என்ற விகிதத்திலேயே தற்போதைய தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அது மட்டுமில்லாமல், பெண்களை சபரிமலைக்குள் அனுமதிக்கூடாது என்ற சம்பிரதாயத்தை போல, இஸ்லாமியர்களின் மசூதிக்குள் பெண்கள் அனுமதிக்கப்படுவதில்லை. 

இந்த இரு மதங்கள் மட்டுமல்லாது, பார்ஸி மதத்திலும் இப்படிப்பட்ட சில சம்பிரதாயங்கள் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. எனவே, ஒரு வழக்கில் வழங்கப்படும் தீர்ப்பை தொடர்ந்து பல கேள்விகள் எழுப்பப்படும். இதனை கருத்தில் கொண்டே, இந்த 6 பேர் கொண்ட சாசன அமர்வு, இதை விட பெரிதான 7 பேர் கொண்டிருக்கும் சாசன அமர்விற்கு இந்த வழக்கினை பரிந்துரை செய்துள்ளது.

பலதரப்பட்ட நீதிபதிகளின் கருத்துக்கள் முன்வைக்கப்படும் நிலையில், அது இந்த வழக்கை ஓர் சரியான தீர்ப்பிற்கு சென்றடைய வழி வகுக்கும் என்று நம்பிக்கை தெரிவிக்கின்றனர் உச்ச நீதிமன்ற நீதிபதிகள்.

Newstm.in

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP