சோனியா, ராகுலுக்கு வருமானவரித்துறை நோட்டீஸ்

வருமானத்தை குறைத்து காட்டி, வரிஏய்ப்பு செய்ததாக சோனியா மற்றும் ராகுலுக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளது. வருமானவரி தாக்கலில் ரூ.68.12 லட்சம் மட்டுமே வருமானம் பெற்றதாக கணக்கு காட்டி உள்ளனர்.
 | 

சோனியா, ராகுலுக்கு வருமானவரித்துறை நோட்டீஸ்

வருமானத்தை குறைத்து காட்டி, வரிஏய்ப்பு செய்ததாக காங்கிரஸ் தலைவர்கள் சோனியா மற்றும் ராகுலுக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

2011 - 2012 ம் நிதியாண்டில் அசோசியேட்டட் ஜர்னல்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் மூலம் சோனியா 155 கோடியே 41 லட்ச ரூபாயும், ராகுல் 154 கோடியே 96 லட்ச ரூபாயும் வருமானம் ஈட்டி உள்ளனர். ஆனால் வருமான வரிதாக்கலில் 68.கோடியே12 லட்சம் ரூபாய் மட்டுமே வருமானம் பெற்றதாக கணக்கு காட்டி உள்ளனர். 

இதே போன்று காங்கிரஸ் கட்சியின் ஆஸ்கார் பெர்னாண்டசும் தனது 48 கோடியே 93 லட்ச ரூபாய் சொத்து மதிப்பை குறைத்து காட்டி வரிஏய்ப்பு செய்ததாக வருமான வரித்துறை கண்டுபிடித்துள்ளது. இவர்களின் சொத்து கணக்கை மறுமதிப்பீடு செய்த போது சோனியா குடும்பத்தினர் 100 கோடி ரூபாய் அளவிற்கு வரிஏய்ப்பு செய்துள்ளது தெரிய வந்தது.

இது தொடர்பாக வருமான வரித்துறை அனுப்பிய நோட்டீசை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதில் சோனியா குடும்பத்திற்காக வாதாடிய முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், அந்த நிறுவனம் 90 கோடி  ரூபாய் கடனில் உள்ளதாகவும், வருமான வரித்துறையினர் அதனை மறைத்து 407 கோடி ரூபாய் சொத்து இருப்பதாக கூறுவதாகவும் கூறினார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட உச்சநீதிமன்றம், ஒரு வாரத்திற்குள் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய சோனியா குடும்பத்திற்கும், வருமான வரித்துறைக்கும் உத்தரவிட்டுள்ளது. தொடர்ந்து இவ்வழக்கின் விசாரணை வருகிற ஜனவரி 29 க்கும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

newstm.in
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP