ஜம்மு-காஷ்மீரில் படிப்படியாக கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும்: மத்தியஅரசு

ஜம்மு-காஷ்மீரில் உள்ள தடைகளை நீக்கக்கோரி தொடரப்பட்ட வழக்கில், கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
 | 

ஜம்மு- காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து திரும்பபெறப்பட்டதையொட்டி ஜம்முவில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், தொலைபேசி, இணையம், செய்தி சேனல்கள் துண்டிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் ஜம்மு-காஷ்மீரில் உள்ள தடைகளை நீக்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தபோது, ஜம்மு-காஷ்மீரில் இன்னும் எவ்வளவு காலம் இந்த தடையை தொடரப் போகிறீர்கள் என நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. அதற்கு பதிலளித்த மத்திய அரசின் வழக்கறிஞர், " ஜம்மு- காஷ்மீரில் அன்றாட நிலைமையை மதிப்பாய்வு செய்து வருவதாகவும், கட்டுப்பாடுகள் சூழ்நிலையை பொறுத்து படிப்படியாக தளர்த்தப்படும் எனவும் தெரிவித்தார்.

இதையடுத்து, 2 வாரங்களில் என்ன நடக்கிறது என்பதை பார்த்து நடவடிக்கை எடுக்கப்படும் என கூறிய நீதிமன்றம் விசாரணையை ஒத்திவைத்தது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP