அயோத்தியா வழக்கு குறித்து ரஞ்சன் கோகாய் குழு ஆய்வு

அயோத்தியா வழக்கில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு அவ்வழக்கின் கண்டுபிடிப்புகள் குறித்தும், விசாரணைகள் குறித்தும் விரிவான கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்ததாக செய்திகள் கூறுகின்றன.
 | 

அயோத்தியா வழக்கு குறித்து ரஞ்சன் கோகாய் குழு ஆய்வு

அயோத்தியா வழக்கில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு அவ்வழக்கின் கண்டுபிடிப்புகள் குறித்தும், விசாரணைகள் குறித்தும் விரிவான கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்ததாக செய்திகள் கூறுகின்றன.

அயோத்தியா வழக்கில், அனைத்து தரப்பினரின் சார்பான இறுதி விசாரணை நடைபெற்று கொண்டிருப்பதை தொடர்ந்து, அக்டோபர் 15 அன்று விசாரணை முடிவடையும் என தலைமை நீதிபதி ஏற்கனவே கூறியிருந்தார். ஆனால் அதற்கு மறுநாளும் விசாரணை மேற்கொள்ளப்பட்டிருந்த நிலையில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான 5 பேர் கொண்ட அமர்வு, அவ்வழக்கு குறித்து விரிவான கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்தனர்.

கடந்த வியாழன் அன்று மேற்கொள்ளப்பட்ட கலந்துரையாடலில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மற்றும் நீதிபதிகள் எஸ்.ஏ.பாப்டே, டி.ஓய். சந்திரசுட், அசோக் பூஷன் மற்றும் எஸ். அப்துல் நாசீர் ஆகியோர் ஈடுபட்டிருந்தனர்.

உத்திரப்பிரதேச மாநிலத்தில், பைசாபாத் மாவட்டத்தில் உள்ள ஓர் அழகிய நகரமான அயோத்தியாவில் உள்ள ராமஜன்ம பூமி, விஷ்ணுவின் ஏழாவது அவதாரமான இராமரது பிறப்பிடமாக இந்து இன மக்களால் நம்பப்படுகிறது. 

இந்த ராமஜன்ம பூமியை இடித்துவிட்டு, மொகலாய அரசர் பாபரின் படைத்தலைவர், முஸ்லீம்களின் வழிபாட்டு தலமான பாப்ரி மஸ்ஜித் என்னும் மசூதியை எழுப்பியதாகவும், பின்பு ஆட்சி செய்த ஆங்கிலேயர்கள் இரு இனத்தவரும் வழிபடும் வகையில், ராமஜன்ம பூமியை மாற்றி அமைத்ததாகவும் வரலாறுகள் கூறுகின்றன.

இதை தொடர்ந்து, கடந்த 1992 ஆம் ஆண்டு ஏற்பட்ட ஓர் சர்ச்சையினால், அன்றிலிருந்து இன்றுவரை, இந்து முஸ்லீம், இருதரப்பினரும், அயோத்தியாவின் ராமஜன்ம பூமி தங்களுக்கு சொந்தமானது என கூறி வருகின்றனர்.

இந்த வழக்கிற்கான தீர்ப்பு, வரும் நவம்பர் 17 ஆம் தேதி அன்று வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Newstm.in

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP