ராஜஸ்தான் கும்பல் கொலை வழக்கு: குற்றம்சாட்டப்பட்ட 6 பேரும் விடுவிப்பு

ராஜஸ்தான் கும்பல் கொலை வழக்கு: குற்றம்சாட்டப்பட்ட 6 பேரும் விடுவிப்பு
 | 

ராஜஸ்தான் கும்பல் கொலை வழக்கு: குற்றம்சாட்டப்பட்ட 6 பேரும்  விடுவிப்பு

ராஜஸ்தானில் கும்பல் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 6 பேரும் நிரபராதிகள் என நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டனர்.

ராஜஸ்தான் மாநிலம் அல்வாரில், பசுக்களை வாகனத்தில் ஏற்றிச்சென்ற பெஹுல் கான் என்ற நபரை பசுப்பாதுகாவலர்கள் என்ற பெயரில் ஒரு கும்பல் அடித்து கொன்றதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. 2017ல் நடந்த இந்த சம்பவம் தொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், சந்தேகத்தின் பலனை குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு அளித்து, 6 பேரையும் விடுதலை செய்தது. இதை எதிர்த்து ராஜஸ்தான் மணிலா அரசு மேல்முறையீடு செய்ய இருப்பதாக தெரிவித்துள்ளது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP