ராகுல் காந்தி எதிர்காலத்தில் மிக எச்சரிக்கையாக பேச வேண்டும்: உச்ச நீதிமன்றம்

வருங்காலங்களில் ராகுல் காந்தி நீதிமன்றத் தீர்ப்பு குறித்து பேசும் போது மிக எச்சரிக்கையாக பேச வேண்டும் என உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
 | 

ராகுல் காந்தி எதிர்காலத்தில் மிக எச்சரிக்கையாக பேச வேண்டும்: உச்ச நீதிமன்றம்

ராகுல் காந்தி வருங்காலங்களில் நீதிமன்றத் தீர்ப்பு குறித்து பேசும் போது மிக எச்சரிக்கையாக பேச வேண்டும் என உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. 

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தேர்தல் பிரச்சார கூட்டம் ஒன்றில் பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்ததோடு, ரபேல் ஒப்பந்த விவகாரத்தில் பிரதமர் மோடியை திருடன் என்று உச்ச நீதிமன்ற நீதிபதியே கூறியிருப்பதாக ‘காவலாளியே திருடன்’ என சுட்டிகாட்டி பேசியிருந்தார். 

இதற்கு பாஜக தலைவர்கள் கடும் எதிர்ப்பும், கண்டனமும் தெரிவித்தனர். மேலும், ராகுல் காந்திக்கு எதிராக, உச்ச நீதிமன்றத்தில் பாஜகு எம்.பி. மீனாட்சி லேகி நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார். வழக்கு விசாரணையின்போது, தனது பேச்சுக்கு ராகுல் காந்தி வருத்தம் தெரிவித்து பிரமாண பத்திரம் தாக்கல் செய்தார். ஆனால், ராகுல் காந்தியின் பதிலில் திருப்தி இல்லை என கூறி விரிவான விளக்கம் அளிக்குமாறு அவருக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இதையடுத்து, ராகுல் காந்தி நிபந்தனையற்ற மன்னிப்பு கோருவதாக உச்ச நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்தார். அதில் காவலாளியே திருடன் என்று மோடியை விமர்சிக்கும் வார்த்தையோடு, தவறுதலாக உச்ச நீதிமன்றம் ரபேல் விவகாரத்தில் அளித்த தீர்ப்போடு ஒப்பிட்டு பேசிவிட்டதாகவும் இந்த தவறுக்கு மன்னிப்பு கோருவதாகவும் தெரிவித்திருந்தார். 

இந்த வழக்கில் இன்று ராகுல் காந்தியின் மன்னிப்பை ஏற்று உச்ச நீதிமன்றம் வழக்கை முடித்து வைத்தது. மேலும், வருங்காலங்களில் இது போன்று நடக்க கூடாது என்றும், நீதிமன்றத் தீர்ப்பு குறித்து பேசும்போது எச்சரிக்கை தேவை எனவும் நீதிமன்றம் அறிவுறுத்தியது. 

Newstm.in

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP