முத்தலாக் அவசரச் சட்டத்துக்கு எதிரான மனு தள்ளுபடி!

முத்தலாக் முறைக்கு தடைவிதித்து மத்திய அரசு கொண்டு வந்துள்ள அவசரச் சட்டத்தை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை, உச்சநீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
 | 

முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த பெண்களின் நலனைக் கருத்தில் கொண்டு, மத்திய பாஜக அரசு கொண்டு வந்த முத்தலாக் தடைச் சட்ட மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. ஆனால், மாநிலங்களவையில் இம்மசோதா நிறைவேற்றப்படவில்லை.

இதையடுத்து,  முத்தலாக் முறைக்கு தடைவிதிக்கும் அவசரச் சட்டத்தை மத்திய அரசு இரண்டாவது முறையாக கடந்த மாதம் பிறப்பித்தது. இந்தச் சட்டத்தை ரத்து செய்யக் கோரி வழக்கறிஞர் ரீபக் கன்சால் என்பவர் தொடர்ந்த வழக்கை, தள்ளுபடி செய்து, உச்சநீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP