ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனு தள்ளுபடி: நீதிமன்றம் அதிரடி உத்தரவு

ஐ.என்.எக்ஸ்., மீடியா முறைகேடு வழக்கில், முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்திற்கு ஜாமீன் வழங்க டெல்லி உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
 | 

ஐ.என்.எக்ஸ்., மீடியாவிற்கு சட்டவிரோதமாக அந்நிய முதலீட்டை அனுமதித்த வழக்கில், ப.சிதம்பரத்தை கடந்த ஆகஸ்ட் 21ஆம் தேதி சிபிஐ கைது செய்தது. தற்போது சிதம்பரம் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அக்டோபர் 3ஆம் தேதி வரை அவருக்கு நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இந்த வழக்கில், ஜாமீன் வழங்க கோரி சிதம்பரம் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து டெல்லி உயர்நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. சிதம்பரம் ஜாமீனில் வெளிவந்தால் சாட்சியங்களை கலைத்துவிடுவார் என சிபிஐ எதிர்ப்பு தெரிவித்திருந்தது. இதையடுத்து, அவருக்கு ஜாமீன் வழங்க மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP