மகாராஷ்டிராவில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவு!

மகாராஷ்டிராவில் நாளை மாலை 5 மணிக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், இன்று மாலை 5 மணிக்குள் இடைக்கால சபாநாயகரை தேர்வு செய்யவும், நாளை நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பை நேரலை செய்யவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 | 

மகாராஷ்டிராவில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவு!

மகாராஷ்டிராவில் நாளை மாலை 5 மணிக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

மகாராஷ்டிராவில் பாஜக ஆட்சியமைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்தும், நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தக்கோரியும் உச்சநீதிமன்றத்தில் காங்கிரஸ், சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கட்சியினர் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் ரமணா, அஷோக் பூஷண், சஞ்சீவ் கண்ணா ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. நேற்றைய தினம் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், நாளை மாலை 5 மணிக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது. மேலும்,  இன்று மாலை 5 மணிக்குள் இடைக்கால சபாநாயகரை தேர்வு செய்யவும், நாளை நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பை நேரலையாக ஒளிபரப்பு செய்யவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

Newstm.in 


 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP