நீட், சிபிஎஸ்இ தேர்வுகளுக்கு ஆதார் தேவையில்லை: உச்ச நீதிமன்றம்

நீட், சிபிஎஸ்இ தேர்வுகளுக்கு ஆதாரை கட்டாயமாக்கக்கூடாது என உச்ச நீதிமன்ற நீதிபதி ஏ.கே. சிக்ரி தெரிவித்துள்ளார். தேர்வுகளுக்கு ஆதார் கட்டாயமாக்கப்பட்டால் மாணவர்களின் படிப்பு பாதிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 | 

நீட், சிபிஎஸ்இ தேர்வுகளுக்கு ஆதார் தேவையில்லை: உச்ச நீதிமன்றம்

நீட், சிபிஎஸ்இ தேர்வுகளுக்கு ஆதாரை கட்டாயமாக்கக்கூடாது என உச்ச நீதிமன்ற நீதிபதி ஏ.கே. சிக்ரி தெரிவித்துள்ளார். 

அரசின் முக்கிய நலத்திட்டங்களுக்கு ஆதார் எண் கட்டாயம் என உச்ச நீதிமன்றம் இன்று அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.  இதில், நீதிபதி தி ஏ.கே. சிக்ரி தீர்ப்பை வாசித்து வருகிறார்.

இந்த தீர்ப்பில், 'நீட், சிபிஎஸ்இ தேர்வுகளில் ஆதாரை கட்டாயமாக்கக்கூடாது. பள்ளியில் குழந்தைகளை சேர்க்க பள்ளி நிர்வாகம் ஆதாரை கேட்கக்கூடாது. தேர்வுகளுக்கு ஆதார் கட்டாயமாக்கப்பட்டால் மாணவர்களின் கல்வி பாதிக்கும். கல்வியில் ஒருபோதும் ஆதாரை கட்டாயமாக்கக்கூடாது' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உச்ச நீதிமன்றத்தின் இந்த கருத்தை மாணவர்கள், பெற்றோர்கள் வரவேற்றுள்ளனர்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP