தடையற்ற ஆபாச வீடியோ வெளியாகக் காரணமாக உள்ள டிக்-டாக்கை  தடை செய்க: மும்பை உயர்நீதிமன்றத்தில் மனு!!!

டிக் டாக்கை ஆப்பை பயன்படுத்துவதில் முன்னிலை வகிக்கும் இந்தியாவில், அதனை முழுமையாக தடைவிதிக்குமாறு மும்பை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார் மூன்று குழந்தைகளின் தாயான ஹீனா தர்வேஷ்.
 | 

இந்தியாவில் ஆண்களும் பெண்களுமாக அனைத்து வயதினரும் பயன்படுத்தும் டிக் டாக் ஆப்பிற்கு தடை விதிக்கக்கோரி கடந்த 11ஆம் தேதியன்று மும்பை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார் ஹீனா தர்வேஷ் என்கிற பெண்மணி. மூன்று குழந்தைகளுக்கு தாயான இவர், டிக் டாக் ஆப்பில் ஆபாச வீடியோ காட்சிகள் தடையின்றி பதிவு செய்யப்படுவதினால், சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரையிலான அனைத்து வயதினரும் உபயோகிக்கும் இந்த ஆப்பிற்கு முழுமையான தடை விதிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார். 

இத்தகைய குற்றச்சாட்டை முன்வைத்து, சென்னை உயர் நீதிமன்றத்திலும் இதே போன்ற மனு தாக்கல் செய்யப்பட்டிருப்பதாக குறிப்பிட்டுள்ள ஹீனா தர்வேஷ், பல்வேறு வகையிலான தவறான செயல்களை காண்பிக்கும் இந்த டிக் டாக் ஆப்பிற்கு தடை விதிக்குமாறு குறிப்பிட்டுள்ளார். 

இவரின் குற்றச்சாட்டிற்கு முன்பாகவே, டிக் டாக் ஆப்பின் மூலம் வெளியிடப்படும் வீடியோக்கள், வன்முறைகளை பரப்பும் விதமாக உள்ளதாக கூறப்பட்டு பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது. 

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP