மகாராஷ்டிரா : மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்!!!

மகாராஷ்டிரா மாநிலத்தில், முதல்வராக பாஜக தலைவர் தேவேந்திர ஃபட்னாவிஸும், துணை முதலமைச்சராக தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் அஜித் பவாரும் பதவியேற்றுள்ளதை தொடர்ந்து, திடீர் ஆட்சி அமைத்த பாஜகவிற்கு எதிராகவும், அவர்களை ஆட்சி அமைக்குமாறு அழைத்த அம்மாநில ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரிக்கு எதிராகவும் சிவசேனா, காங்கிரஸ் மற்றும் என்.சி.பி கட்சிகள் மூன்றும் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தன.
 | 

மகாராஷ்டிரா : மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்!!!

மகாராஷ்டிரா மாநிலத்தில், முதல்வராக பாஜக தலைவர் தேவேந்திர ஃபட்னாவிஸும், துணை முதலமைச்சராக தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் அஜித் பவாரும் பதவியேற்றுள்ளதை தொடர்ந்து, திடீர் ஆட்சி அமைத்த பாஜகவிற்கு எதிராகவும், அவர்களை ஆட்சி அமைக்குமாறு அழைத்த அம்மாநில ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரிக்கு எதிராகவும் சிவசேனா, காங்கிரஸ் மற்றும் என்.சி.பி கட்சிகள் மூன்றும் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தன. 

இதை தொடர்ந்து, இவர்களுக்கு எதிராக தொடரப்பட்டிருக்கும் வழக்கு, அவசர வழக்காக விசாரிக்கப்பட வேண்டும் என்ற முக்கட்சிகளின் கோரிக்கையை ஏற்று இன்று காலை 11.30 மணிக்கு இதற்கான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் தொடங்கப்பட்டது. 

நீதிபதிகள் ரமணா, அஷோக் பூஷன் மற்றும் சஞ்சீவ் கண்ணா ஆகிய மூவர் கொண்ட அமர்வு முன்னிலையில், இந்த வழக்கின் விசாரணை தொடங்கப்பட்டது. சிவசேனா தரப்பில் வழக்கறிஞராக கபில் சிபலும், என்.சி.பி. காங்கிரஸ் தரப்பில் வழக்கறிஞராக அபிஷேக் மனு சிங்வியும், பாஜக தரப்பில் வழக்கறிஞராக முகுல் ரோத்தகியும் ஆஜராகினர். 

சிவசேனா தரப்பில் வாதாடிய கபில் சிபல் கூறுகையில், "மகாராஷ்டிராவில் அமைக்கப்பட்டிருக்கும் தற்போதைய ஆட்சி சற்றும் எதிர்பார்க்காமல் அமைக்கப்பட்டுள்ளது. யாரோ எங்கிருந்தோ வழங்கிய உத்தரவின் பேரில் அங்கு ஆட்சியமைக்கப்பட்டுள்ளது. இன்றே நம்பிக்கை வாக்கெடுப்பு வைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தால், பெரும்பாண்மையை நிரூபித்து ஆட்சி அமைக்க தங்களால் முடியும்" என்று கூறியுள்ளார். 

என்.சி.பி-காங்கிரஸ் தரப்பு வழக்கறிஞர் அபிஷேக் கூறுகையில், "வெறும் 42 எம்.எல்.ஏக்களை மட்டும் வைத்து கொண்டு அஜித் பவார் ஆட்சி அமைத்திருப்பது வேடிக்கை அளிக்கிறது. நேற்று வரை கட்சியின் சட்டமன்றக் கட்சி தலைவராக கூட தேர்வு செய்யப்படாத ஒருவர் அவர். கட்சியின் ஆதரவே இல்லாத ஒருவரை எப்படி துணை முதல்வராக பதவியில் அமர்த்த முடியும்" என்று கேள்வியெழுப்பியுள்ளார்.

மேலும், 1998ஆம் ஆண்டு உத்திரப்பிரதேச மாநிலத்திலும், 2018ஆம் ஆண்டு கர்நாடகாவிலும் மேற்கொள்ளப்பட்ட நம்பிக்கை வாக்கெடுப்பை போல, இங்கும் மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் முன் வைத்துள்ளார் அவர்.

இந்நிலையில், பாஜக தலைமையில் வாதாடிய வழக்கறிஞர் முகுல் ரோத்தகி கூறுகையில், "பிரதமரின் சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி, இந்திய அரசியல் சட்டத்துக்கு கீழ்படிந்தே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதில் எதுவுமே சட்டத்துக்கு புறம்பாக இல்லாத நிலையில், எதற்காக மீண்டும் நம்பிக்கை வாக்கெடுப்பு" என்று கேள்வியெழுப்பியுள்ளார்.

இவர்கள் மூவரின் வாதங்களையும் முழுமையாக கேட்ட நீதிபதிகள், மகாராஷ்டிரா மாநிலத்தில் பாஜகவை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைத்ததாக கூறப்படும் நிலையில், அவர் எதன் அடிப்படையில் அவர்களுக்கு அழைப்பு விடுத்தார் என்பதற்கான ஆதாரங்களை நாளை காலை 11.30 மணிக்குள் சமர்பிக்குமாறு உத்தரவு பிறப்பித்துள்ளதோடு, தற்போது முன் வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்குமாறு மத்திய அரசிற்கு நோட்டீலும் அனுப்பியுள்ளனர்.

மேலும், நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்ற முக்கட்சிகளின் கோரிக்கையை கருத்தில் கொண்டு, இந்த வழக்கிற்கான தீர்ப்பை நாளை வழங்குவதாகவும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP