Logo

கர்நாடக எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செல்லும்: உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

கர்நாடக எம்.எல்.ஏக்கள் 17 பேரின் தகுதி நீக்கம் செல்லும் என்றும், அதே நேரத்தில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 17 எம்.எல்ஏக்களும் வரும் இடைத்தேர்தலில் போட்டியிடலாம் எனவும்உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பை வழங்கியுள்ளது.
 | 

கர்நாடக எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செல்லும்: உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

கர்நாடக எம்.எல்.ஏக்கள் 17 பேரின் தகுதி நீக்கம்  செல்லும் என உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பை வழங்கியுள்ளது. 

கர்நாடகாவில் கடந்த 2018 ஆம் ஆண்டு மே மாதம் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ்- ஜனதா தளம் கட்சிகள் கூட்டணி அமைத்து ஆட்சி அமைத்தன. 14 மாதங்கள் குமாரசாமி தலைமையில் ஆட்சி நடைபெற்ற நிலையில், கூட்டணி கட்சிகளின் 15 எம்.எல்.ஏக்கள் திடீரென ராஜினாமா செய்தனர். இதையடுத்து நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில், ராஜினாமா செய்தவர்கள் உள்பட 17 எம்.எல்ஏக்கள் ஆஜராகாததால், குமாரசாமி அரசு கவிழ்ந்தது. பின்னர் பாஜக அரசு பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தது. இதனிடையே காங்கிரஸ், ஜனதா தளம் கட்சிகளின் கொறடா உத்தரவை மீறியதாக 17 எம்.எல்.ஏக்களை கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் அப்போதைய சபாநாயகர் ரமேஷ்குமார் தகுதிநீக்கம் செய்து உத்தரவிட்டார்.  மேலும் 2023ஆம் ஆண்டு வரை கர்நாடக சட்டசபை தேர்தலில் போட்டியிடவும் தடை விதித்தார்.  

சபாநாயகரின் இந்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் 17 பேர் தொடர்ந்த வழக்கில் நீதிபதிகள் என்.வி.ரமணா, சஞ்வீவ் கண்ணா, கிருஷ்ணா முராரி அமர்வு இன்று தீர்ப்பு வழங்கியது. அப்போது, கர்நாடக சட்டப்பேரவை சபாநாயகரின் முடிவில் உச்சநீதிமன்றம் தலையிட முடியாது என கூறிய நீதிபதிகள் 17 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செல்லும் என்றும் அதே நேரத்தில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 17 எம்.எல்ஏக்களும் வரும் இடைத்தேர்தலில் போட்டியிடலாம்  எனவும் தீர்ப்பளித்தனர். 

Newstm.in 
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP