கர்நாடக சட்டப்பேரவை கூத்துக்களை கண்டித்து பொதுநல வழக்கு!

கர்நாடக மாநில சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவதில் வேண்டுமென்றே திட்டமிட்டு தாமதம் செய்யப்பட்டு வருகிறது எனக்கூறி, ஆனந்த் மூர்த்தி என்ற வழக்கறிஞர் கர்நாடக மாநில உயர்நீதிமன்றத்தில் இன்று, பொது நல வழக்கு தொடர்ந்துள்ளார்
 | 

கர்நாடக சட்டப்பேரவை கூத்துக்களை கண்டித்து பொதுநல வழக்கு!

கர்நாடக மாநிலத்தில் ஆளும் மதச்சார்பற்ற ஜனதா தளம் மற்றும் அதன் கூட்டணி கட்சியான காங்கிரஸை சேர்ந்த 16 எம்எல்ஏ., தங்களது பதவியை ராஜினாமா செய்வதாகக் கூறி, அதற்கான கடிதத்தை ஆளுநரிடம் அளித்தனர்.

இதையடுத்து, முதல்வர் குமாரசாமி தலைமையிலான அரசு. சட்டப்பேரவையில் தமது பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. முதல்வர் குமாரசாமி கடந்த வியாழக்கிழமை (ஜூலை 18) நம்பிக்கை வாக்கு கோருவார் என அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால், பல்வேறு காரணங்களை காட்டி, ஆளும் கூட்டணி கட்சிகள் நம்பிக்கை வாக்கு கோருவதை தாமதப்படுத்தி வருகின்றனர். இதற்கு ஆளுநரும் இடம் கொடுத்து வருகிறார் என்று பாஜக குற்றம்சாட்டி வருகிறது.

இந்த நிலையில், கர்நாடக மாநில சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவதில் வேண்டுமென்றே திட்டமிட்டு தாமதம் செய்யப்பட்டு வருகிறது எனக்கூறி, ஆனந்த் மூர்த்தி என்ற வழக்கறிஞர் கர்நாடக மாநில உயர்நீதிமன்றத்தில் இன்று, பொது நல வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் எனத் தெரிகிறது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP