அயோத்தி வழக்கு விசாரணையில் இருந்து நீதிபதி விலகல்!!

அயோத்தி வழக்கு விசாரணை அமர்வில் இருக்கும் நீதிபதி யு.யு.லலித், இதற்கு முன்பு வழக்கறிஞராக இருந்தபோது அயோத்தி பிரச்னை குறித்த வழக்கில் கல்யாண் சிங்கிற்கு ஆதரவாக வாதாடியவர் என ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது. இதனால் அவர் விலகினார்.
 | 

அயோத்தி வழக்கு விசாரணையில் இருந்து நீதிபதி விலகல்!!

அயோத்தி வழக்கு விசாரணையில் இருந்து விலகுவதாக உச்சநீதிமன்ற நீதிபதி யு.யு.லலித் அறிவித்துள்ளார். இதையடுத்து வழக்கு விசாரணை ஜனவரி 29ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

அயோத்தியில் குறிப்பிட்ட இடம் யாருக்குச் சொந்தம் என்பது குறித்து ராம ஜென்ம பூமி இயக்கத்திற்கும், சன்னி வஃபு வாரியத்திற்கும் இடையே போட்டி நிலவி வருகிறது. இதுதொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அதை விசாரிப்பதற்காக 5 நீதிபதிகளைக் கொண்ட அரசியல் சாசன அமர்வு அமைக்கப்பட்டது.

இந்நிலையில், மனு இன்று பரிசீலனைக்கு வரும் என்றும், அப்போது வழக்கை எந்த தேதியில் இருந்து விசாரிப்பது என்று முடிவு செய்யப்படும் என்றும் கூறப்பட்டிருந்தது. அதன்படி இன்று வழக்கு பரிசீலனைக்கு வந்தது. அப்போது, விசாரணை அமர்வில் இருக்கும் நீதிபதி யு.யு.லலித், இதற்கு முன்பு வழக்கறிஞராக இருந்தபோது அயோத்தி பிரச்னை தொடர்பான வழக்கில் முன்னாள் முதல்வர் கல்யாண் சிங்கிற்கு ஆதரவாக வாதாடியவர் என்று எதிர்தரப்பு வழக்கறிஞர் ஆட்சேபம் தெரிவித்தார்.

இதையடுத்து, விசாரணையில் இருந்து விலகிக் கொள்வதாக அந்த நீதிபதி தெரிவித்தார். மேலும் வழக்கு விசாரணை 29ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. அயோத்தி வழக்கில், நீதிபதி லலித் விலகியுள்ளதால், அவருக்குப் பதிலாக வேறொரு நீதிபதியை உச்சநீதிமன்றம் நியமிக்க வேண்டியுள்ளது.


newstm.in
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP