Logo

தீர்ப்புக்காக என்னிடம் செல்வாக்கை பயன்படுத்தினர்!- நீதிபதி இந்திரா பானர்ஜி 

குறிப்பிட்ட வழக்கின் விசாரணைக்காக தன்னிடம் செல்வாக்கை பெறுவதற்கு முயற்சி நடந்ததாக உச்ச நீதிமன்ற பெண் நீதிபதி இந்திரா பானர்ஜி கூறியுள்ளார். இந்த பேரம் எப்போது, எந்த வகையில், எவரின் மூலமாக நடைபெற்றது என அவர் வெளிபடுத்திவில்லை.
 | 

தீர்ப்புக்காக என்னிடம் செல்வாக்கை பயன்படுத்தினர்!- நீதிபதி இந்திரா பானர்ஜி 

குறிப்பிட்ட வழக்கின் விசாரணைக்காக தன்னிடம்  செல்வாக்கை பெறுவதற்கு முயற்சி நடந்ததாக உச்ச நீதிமன்ற பெண் நீதிபதி இந்திரா பானர்ஜி கூறியுள்ளார்.

நீதிபதிகளை வழக்கு தொடர்பாக தனிப்பட்ட முறையில் அவர்களது செல்வாக்கை பெறுவதற்கு யாரும் அணுகுவதில்லை. ஆனால் உச்சநீதிமன்ற பெண் நீதிபதி ஒருவரையே இதுபோல் ஒரு வழக்கில் சிலர் தங்களுக்கு சாதகமாக நடந்து கொள்ளும்படி அணுகிய தகவல் தற்போது தெரிய வந்துள்ளது.

சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்து அண்மையில் உச்ச நீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்வு பெற்ற இந்திரா பானர்ஜி தன்னிடம் சாதகமான தீர்ப்பு ஒன்றிற்காக பேரம் பேசப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார். இந்த பேரம் எப்போது, எந்த வகையில், எவரின் மூலமாக நடைபெற்றது என அவர் வெளிபடுத்திவில்லை. 

ஆகஸ்ட் 30ம் தேதி உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அருண் மிஸ்ரா, இந்திரா பானர்ஜி  ஆகியோர் ஓட்டல் ராயல் பிளாசா தொடர்பான ஒரு வழக்கை விசாரித்தனர்.

வழக்கின்போது நீதிபதி இந்திரா பானர்ஜி கூறுகையில், ''வழக்கறிஞர்களை சந்திக்கும் சாதாரண நிகழ்வுகளின்போது, சில மூத்த வழக்கறிஞர்கள் நிலுவையில் உள்ள வழக்குகளை விசாரிப்பது தொடர்பாக பேச ஆரம்பித்து விடுகின்றனர். சிலர் தொலைபேசி மூலமும் தொடர்பு கொண்டு இதே விஷயத்தை பேசுகின்றனர். இதுபோல் நீதிபதிகளின் செல்வாக்கை வழக்கு விசாரணைக்காக பெற முயற்சிப்பது தீவிரமானதாக எடுத்துக் கொள்ளப்படும்'' என்றார்.

இதையடுத்து, மூத்த வழக்கறிஞர் ஷியாம் திவான், ''இந்த வழக்கை விசாரணை செய்வதில் இருந்து நீதிபதி இந்திரா பானர்ஜி விலகி விடக் கூடாது. அப்படிச் செய்தால் மற்ற நீதிபதிகளும் இதைப் பின்பற்றும் நிலை உருவாகும்'' என்று கேட்டுக் கொண்டார்.

அப்போது, நீதிபதி அருண் மிஸ்ரா குறுக்கிட்டு, ''வழக்கு விசாரணைகளில் நீதிபதிகளின் செல்வாக்கை பெறுவதற்கு முயற்சிப்பது, நீதிமன்றத்தை அவமதிக்கும் செயலாகும்'' என்று எச்சரித்தார்.

பெண் நீதிபதி இந்திரா பானர்ஜியின் இந்த குற்றச்சாட்டு உச்ச நீதிமன்ற வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP