நீதித் துறை பணிகளில் இடஒதுக்கீடா? : மத்திய அரசு விளக்கம்

இந்திய அரசியலமைப்பு சட்டப்பிரிவு 235 -ன்படி, மாவட்ட மற்றும் கிளை நீதிமன்றங்களை நிர்வாக ரீதியாக கட்டுப்படுத்தும் உரிமை அந்தந்த மாநிலத்தின் உயர்நீதிமன்றங்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது என்று மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் பதிலளித்தார்.
 | 

நீதித் துறை பணிகளில் இடஒதுக்கீடா? : மத்திய அரசு விளக்கம்

நீதித்துறை பணிகளில் இடஒதுக்கீட்டு முறையை அமல்படுத்தும் திட்டம் உள்ளதா என நாடாளுமன்ற மக்களவையில் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு, மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் அளித்த பதில் :

இந்திய அரசியலமைப்பு சட்டப்பிரிவு 235 -ன்படி, மாவட்ட மற்றும் கிளை நீதிமன்றங்களை நிர்வாக ரீதியாக கட்டுப்படுத்தும் உரிமை அந்தந்த மாநிலத்தின் உயர்நீதிமன்றங்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது.

அதேசமயம், உயர்நீதிமன்ற நீதிபதிகளை நியமிக்கும் அதிகாரத்தை அந்தந்த மாநில உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகளுக்கு வழங்கும் திட்டம் உள்ளது.மேலும், மாநிலங்கள் அளவில் நீதித் துறை அதிகாரிகளை நியமிப்பது, அவர்களுக்கு பதவி உயர்வு அளிப்பது, இந்நியமனங்களில் இடஒதுக்கீட்டு முறையை கொண்டு வருவது உள்ளிட்டவை தொடர்பாக சட்ட விதிமுறைகளை வகுப்பது குறித்து, உயர்நீதிமன்ற நிர்வாகங்கள் ஆலோசித்து வருகின்றன. எனவே, இதில் மத்திய அரசின் நடவடிக்கை எதுவுமில்லை என அமைச்சர் பதிலளித்தார்.

newstm.in
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP