ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் சிதம்பரத்தை கைது செய்ய அமலாக்கத்துறைக்கு தடை நீட்டிப்பு!

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் மத்திய முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரத்தை கைது செய்ய நாளை வரை தடையை நீட்டித்து அமலாக்கத்துறைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
 | 

ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு தொடர்பான வழக்கில், மத்திய முன்னாள் அமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவருமான சிபிஐ ப.சிதம்பரம் கடந்த 22ம் தேதி சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.  முதலில் ஐந்து நாட்கள் காவல் வழங்கப்பட்ட நிலையில், மேலும் 5 நாட்களுக்கு சிபிஐ காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. 

இதற்கிடையே இந்த வழக்கில் ப. சிதம்பரம் மீது அமலாக்கத்துறையும் தனியே வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றது. எனவே, அமலாக்கத்துறையும் கைது செய்யலாம் என்ற அடிப்படையில் ப.சிதம்பரம் தொடர்ந்த வழக்கில் அவரை கைது செய்ய அமலாக்கத்துறைக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்தது. தற்போது அந்த தடையை நாளை வரை நீட்டித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், நாளை உச்ச நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வருகிறது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP