போலி சாமியார் மீதான கொலை வழக்கில் இன்று விசாரணை

பாலியல் பலாத்கார வழக்கில், 20 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற, தேரா சச்சா சவுதா அமைப்பை சேர்ந்த போலி சாமியார் குர்மீத் ராம் ரஹீம் மீதான கொலை வழக்கில் இன்று விசாரணை நடக்கிறது.
 | 

போலி சாமியார் மீதான கொலை வழக்கில் இன்று விசாரணை

 

பாலியல் பலாத்கார வழக்கில், 20 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற, தேரா சச்சா சவுதா அமைப்பை சேர்ந்த போலி சாமியார் குர்மீத் ராம் ரஹீம் மீதான கொலை வழக்கில் இன்று விசாரணை நடக்கிறது.

பஞ்சாப்பை சேர்ந்த, ராம் ரஹீம், சிர்சா மாவட்டத்தில், மிகப் பெரிய ஆசிரமத்தை ஸ்தாபித்து, தன்னை தானே கடவுள் என கூறி வந்தார். அவரை காண ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.
 
கல்வி நிறுவனங்கள், மருத்துவமனை போன்றவற்றை அறக்கட்டளை மூலம் நடத்தி வந்த அவர் மீது, பெண் ஒருவர் பாலியல் புகாரை முன் வைத்தார்.

 தன்னை காண வந்த பெண் பக்தர்களை, ராம் ரஹீம் பலாத்காரம் செய்தது நிரூபிக்கப்பட்டதை அடுத்து, 2017 ஆகஸ்டில், அவருக்கு, 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

இதையடுத்து, அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரை சிறைக்கு அழைத்து சென்றபோது கூட, அவரது ஆதரவாளர்கள் கலவரத்தில் ஈடுபட்டதால், பல உயிரிழப்புகளும், பொருள் சேதமும் ஏற்பட்டது.

இதை தொடர்ந்து, அவரது ஆசிரமத்தில் நடந்த சோதனையில், பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. பல ஆபாச சி.டி.,க்கள் கைப்பற்றப்பட்டன.

இந்நிலையில், 16 ஆண்டுகளுக்கு முன், ராம் ரஹீமின் பின்னணி குறித்தும், அவரது சட்ட விரோத செயல்கள் குறித்தும் செய்தி வெளியிட்ட பத்திரிகையாளர் கொல்லப்பட்டார். இதில், ராம் ரஹீமுக்கு முக்கிய தொடர்பு இருப்பதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. சிலரின் சாட்சியத்தின் படி, ராம் ரஹீமே, அந்த பத்திரிகையாளரை சுட்டுக் கொன்றதாகவும் கூறப்பட்டுள்ளது. 
இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக, சி.பி.ஐ., சிறப்பு காேர்ட் இன்று விசாரிக்க உள்ளது. இது, ராம் ரஹீமுக்கு மேலும் பின்னடைவை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP