நான் எங்கும் செல்ல மாட்டேன்: ப.சிதம்பரம் விளக்க மனு

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் ஜாமீன் கிடைத்தாலும் நான் வெளிநாடு தப்பி செல்ல மாட்டேன் என ப.சிதம்பரம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் விளக்க மனு தாக்கல் செய்துள்ளார்.
 | 

ஜ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் கைதாகி சிறையில் உள்ள ப.சிதம்பரம் ஜாமீன் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு இன்று விசாரணைக்கு வரவுள்ளது. இந்நிலையில், ப.சிதம்பரம் ஜாமீனுக்கு சிபிஐ எதிர்ப்பு தெரிவித்து வருவதால் டெல்லி உயர்நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் சார்பில் விளக்க மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

அந்த மனுவில், நான் மாநிலங்களவை உறுப்பினர், பொறுப்புமிக்க குடிமகன் என்பதால், ஜாமீன் கிடைத்தாலும் நான் வெளிநாடு செல்ல மாட்டேன் என்றும், என் குடும்பம் பல ஆண்டுகளாக நம் நாட்டில் வேரூன்றி உள்ளது என்றும் தெரிவித்துள்ளார். நான் வெளிநாடு தப்பி சென்று விடுவேன் என சிபிஐ கூறுவது முற்றிலும் தவறு. ஜாமீன் கொடுக்ககூடாது என்பதற்காகவே சிபிஐ எதிர்ப்பதாகவும், என் மீதான குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் இல்லை எனவும் அதில் ப.சிதம்பரம் குறிப்பிட்டுள்ளார். 

Newstm.in 
 
newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP