டி.கே.சிவக்குமாரின் காவல் நீட்டிப்பு

சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கில், கர்நாடக முன்னாள் அமைச்சர் டி.கே.சிவக்குமாரின் காவலை செப்டம்பர் 17-ஆம் தேதி வரை நீட்டித்து டெல்லி சிறப்பு சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 | 

சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கில், செப்டம்பர் 3 ஆம்  தேதி கைது செய்யப்பட்ட சிவக்குமார், அமலாக்கபிரிவு காவலில் 10 நாள் விசாரணை முடிந்து டெல்லி சிறப்பு சிபிஐ நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, சிவக்குமார் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என்று கூறிய அமலாக்கத்துறை, அவரை மேலும் 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க கோரி மனுத்தாக்கல் செய்தது.

இதையடுத்து, இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், சிவக்குமாரின் நீதிமன்ற காவலை செப்டம்பர் 17-ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கு தொடர்பாக, சிவக்குமார் மகளிடம், நேற்று பல மணி நேரம் அமலாக்கத்துறை விசாரணை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP