ஏமாற்றப்பட்டாரா தோனி? உச்ச நீதிமன்றம் அதிரடி

பிரபல கட்டுமான நிறுவனமான அம்ரப்பள்ளி, அந்த நிறுவனத்தின் விளம்பர துாதராக இருந்த, இந்திய கிரிக்கெட் வீரர் தோனிக்கு தர வேண்டிய, 40 கோடி ரூபாயை தராமல் ஏமாற்றியதாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இது தொடர்பாக, உரிய ஆவணங்களை தாக்கல் செய்ய, அம்ரப்பள்ளி நிறுவனத்திற்கு கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
 | 

நாட்டின் முக்கிய நகரங்களில் கட்டுமான பணியை மேற்கொண்ட அம்ரப்பள்ளி தற்போது, பெரும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது. பல நகரங்களில், இதன் கட்டுமானங்கள் முடிக்கப்படாமல் உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால், அந்த நிறுவனத்தில் வீடு வாங்க பணம் செலுத்திய வாடிக்கையாளர்களுக்கு உரிய நேரத்தில் வீடுகள் ஒப்படைக்கப்படவில்லை.

இந்நிலையில், அந்த நிறுவனத்திடம் பணம் செலுத்தி உரிய நேரத்தில் வீட்டை பெற முடியாமல் போனவர்கள் பட்டியலில், இந்திய கிரிக்கெட் அணி நட்சத்திர வீரர் மகேந்திர சிங் தோனியும் உள்ளார். அவர், அம்ரப்பள்ளி நிறுவனத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார். 

அதே போல், 2009 முதல் 2016ம் ஆண்டு வரை, அந்த நிறுவனத்தின் விளம்பர துாதராக செயல்பட்டதற்கான தொகையான, 40 கோடி ரூபாயை வழங்காமல் இழுத்தடிப்பதாகவும், அந்த புகாரில் தோனி குறிப்பிட்டுள்ளார். 

இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், அம்ரபள்ளி நிறுவனத்தின் விளம்பர துாதராக தோனி செயலாற்றிய காலகட்டத்தில், அந்த நிறுவனம், தோனிக்கு தொகை வழங்கியதா என்பதை உறுதி செய்ய, அந்த நிறுவனத்தின் வங்கி கணக்கு பரிவர்த்தனை ஆவணங்களை தாக்கல் செய்யும் படி உத்தரவிட்டுள்ளது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP