கமல் பேசியதற்கான வீடியோ ஆதாரங்களை தாக்கல் செய்ய டெல்லி நீதிமன்றம் உத்தரவு!

இந்து மதத்திற்கு எதிராக கமல் பேசியதற்கான ஆதாரங்களை தாக்கல் செய்ய டெல்லி பட்டியாலா நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
 | 

கமல் பேசியதற்கான வீடியோ ஆதாரங்களை தாக்கல் செய்ய டெல்லி நீதிமன்றம் உத்தரவு!

இந்து மதத்திற்கு எதிராக கமல் பேசியதற்கான ஆதாரங்களை தாக்கல் செய்ய டெல்லி பட்டியாலா நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

"சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து" என கமல் ஹாசன் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதற்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். 

கமல் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி இந்து சேனா அமைப்பின் தலைவர் விஷ்ணுகுப்தா டெல்லி பட்டியாலா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு இன்று நீதிபதிகள் முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது, இந்து மதத்திற்கு எதிராக கமல் பேசியதற்கான வீடியோ ஆதாரங்களை தாக்கல் செய்ய அவர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

தாக்கல் செய்யப்படும் வீடியோ ஆதாரங்களின் அடிப்படையில், கமலுக்கு நோட்டீஸ் அனுப்புவது குறித்து அடுத்த விசாரணையின்போது (ஆகஸ்ட் 2 ) முடிவு செய்யப்படும் என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP