ப.சிதம்பரத்திற்கு முன்ஜாமீன் வழங்கக்கூடாது: சிபிஐ முறையீடு

ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் ப.சிதம்பரத்துக்கு, முன்ஜாமீன் வழங்க கூடாது என டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் சிபிஐ முறையிட்டுள்ளது.
 | 

ப.சிதம்பரத்திற்கு முன்ஜாமீன் வழங்கக்கூடாது: சிபிஐ முறையீடு

ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் ப.சிதம்பரத்துக்கு முன்ஜாமீன் வழங்க கூடாது என டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் சிபிஐ முறையிட்டுள்ளது. 

ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் சிபிஐ, அமலாக்கத்துறை ஆகிய நிறுவனங்கள் கைது செய்யாமல் இருக்கக் வேண்டும் என்று கோரி ப.சிதம்பரம் மற்றும் கார்த்தி ஆகியோர் முன் ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த மனு மீதான விசாரணை இன்று பிற்பகல் 2 மணிக்கு டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஓ.பி ஷைனி முன்னிலையில் நடைபெற உள்ளது. 

இந்நிலையில், ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனு டெல்லி உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றங்களில் நிராகரிக்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டி ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் ப.சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனுவை நிராகரிக்க வேண்டும் என சிபிஐ சிறப்பு நீதமன்ற நீதிபதி ஓ.பி. சைனியிடம்  சிபிஐ மனு தாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது 

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP