ப.சிதம்பரத்திற்கு நவ., 13 வரை நீதிமன்றக் காவல்

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில், முன்னாள் மத்திய நிதியமைச்சர் பா.சிதம்பரத்திற்கு நவம்பர் 13ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.
 | 

ப.சிதம்பரத்திற்கு நவ., 13 வரை நீதிமன்றக் காவல்


ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில், முன்னாள் மத்திய நிதியமைச்சர் பா.சிதம்பரத்திற்கு நவம்பர் 13ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.

அமலாக்கத்துறை காவல் முடிந்த நிலையில் டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் இன்று ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, சிதம்பரத்தை ஒருநாள் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறை அனுமதி கோரியது. இந்த கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம், சிதம்பரத்தின் நீதிமன்ற காவலை நவம்பர் 13ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது.

மேலும், ப.சிதம்பரத்துக்கு மூன்று வேளையும் வீட்டு உணவு வழங்க அனுமதி கொடுத்த நீதிமன்றம், திகார் சிறையில் சிதம்பரத்துக்கு சலுகைகள் வழங்கவும் ஆணையிட்டுள்ளது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP