அவமதிப்பு வழக்கு: ராகுலுக்கு கோர்ட் நோட்டீஸ் 

அகமதாபாத் மாவட்ட குட்டறவு வங்கி தொடுத்த அவமதிப்பு வழக்கில் நேரில் ஆஜராகும்படி, காங்கிரஸ் தலைவர் ராகுலுக்கு, அகமதாபாத் மெட்ரோ நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
 | 

அவமதிப்பு வழக்கு: ராகுலுக்கு கோர்ட் நோட்டீஸ் 

அகமதாபாத் மாவட்ட கூட்டுறவு வங்கி தொடுத்த அவமதிப்பு வழக்கில் நேரில் ஆஜராகும்படி, காங்கிரஸ் தலைவர் ராகுலுக்கு, அகமதாபாத் மெட்ரோ நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 

குஜராத் மாநிலம் அகமதாபாத்தை தலைமையகமாக கொண்டு இயங்கும் அகமதாபாத் மாவட்ட கூட்டுறவு வங்கி, காங்கிரஸ் தலைவர் ராகுல் மற்றும் அந்த கட்சியின் செய்தி தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா ஆகியோர் மீது, அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது. 

வங்கியைப் பற்றி தவறாக பேசியதாகவும், வங்கியின் செயல்பாட்டை சந்தேகப்படும் வகையில், இழுக்கு ஏற்படுத்தும் வகையிலும் பேசியதாக, அவர்கள் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. 

இந்த வழக்கு விசாரணைக்கு, அடுத்த மாதம், 27ம் தேதி நேரில் ஆஜராகும்படி, ராகுல் மற்றும் சுர்ஜேவாலா ஆகியோருக்கு அகமதாபாத் மெட்ரோ கோர்ட் உத்தரவிட்டுள்ளது. 

newstm.in


 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP