ஒருமித்த கருத்துடன் உடலுறவு கொள்வது பாலியல் வன்கொடுமை அல்ல: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

ஒருமித்த கருத்துடன் உடலுறவு வைத்துக்கொண்டு, பின்னர் திருமணம் செய்ய மறுத்தால் அது பாலியல் வன்கொடுமைக்கு உட்பட்டது அல்ல என மகாராஷ்டிர மாநில உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
 | 

ஒருமித்த கருத்துடன் உடலுறவு கொள்வது பாலியல் வன்கொடுமை அல்ல: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

ஒருமித்த கருத்துடன் உடலுறவு வைத்துக்கொண்டு, பின்னர் திருமணம் செய்ய மறுத்தால் அது பாலியல் வன்கொடுமைக்கு உட்பட்டது அல்ல என மகாராஷ்டிர மாநில உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. 

மகாராஷ்டிர மாநிலத்தில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்யும் ஒரு ஆணுக்கு, அதே நிறுவனத்தில் பணிபுரியும் ஒரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அந்த பெண் ஏற்கனவே திருமணமாகி விதவையானவர். அந்த ஆணும் திருமணமாகி மனைவியுடன் வசித்து வருகிறார். 

இந்நிலையில் இவர்களது இந்த நட்பு சில மாதங்களில் காதலாக மாற, இருவரும் தங்களது விருப்பப்படி உடலுறவிலும் ஈடுபட்டுள்ளனர். இந்த நிகழ்வு பலமுறை தொடர்ந்து அரங்கேறியுள்ளது. பின்னர் அந்த  பெண், தன்னை திருமணம் செய்துகொள்ள வற்புறுத்தவே அந்த ஆண் மறுப்பு தெரிவித்துள்ளார். 

இந்நிலையில் தான், தன்னை காதலித்துவிட்டு திருமணம் செய்துகொள்ள மறுப்பதாக அந்த பெண் உயர்நீதிமன்றத்தில் மனு அளித்தார். இந்த வழக்கு இன்று மகாராஷ்டிர உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.கே.அவஸ்தி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. 

அப்போது நீதிபதி பேசுகையில், "அந்த ஆணுக்கு ஏற்கனவே திருமணமாகி மனைவியுடன் குடும்பம் நடத்தி வருகிறார். அவர் இந்த நிலையில் அவர் மற்றொரு பெண்ணுடன் உடலுறவு கொண்டது தவறு தான். அவர் மற்றொரு திருமணம் தற்போது செய்துகொள்ள முடியாது. இருவரும் ஒருமித்த கருத்துடன் உடலுறவு கொண்டதால் இது பாலியல் வன்கொடுமைக்கு உட்பட்டது அல்ல. எனவே இந்த விவகாரத்தில் பாலியல் தொடர்பான சட்டத்தை தவறாக பயன்படுத்துவதை நீதிமன்றம் அனுமதிக்காது" என்று தீர்ப்பளித்தார். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP