நிலக்கரி ஊழல் – முன்னாள் அதிகாரி உள்பட 4 பேர் குற்றவாளி

மேற்கு வங்க மாநில நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீடு வழக்கில் குற்றவாளிகள் ஐந்து பேரையும் நீதிமன்றக் காவலில் அடைக்குமாறு நீதிபதி இன்று உத்தரவிட்டார். அவர்களுக்கான தண்டனை விபரம், வரும் 3ம் தேதி அறிவிக்கப்படும் என்றும் நீதிபதி தெரிவித்தார்.
 | 

நிலக்கரி ஊழல் – முன்னாள் அதிகாரி உள்பட 4 பேர் குற்றவாளி

மேற்கு வங்க மாநிலத்தில் நிலக்கரிச் சுரங்கம் ஒதுக்கீடு செய்யப்பட்டதில் ஊழல் நடைபெற்றது தொடர்பாக, நிலக்கரிச் சுரங்கத் துறையின் முன்னாள் செயலாளர் ஹெச்.சி.குப்தா உள்பட 5 பேரை குற்றவாளி என அறிவித்து டெல்லி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இதுதொடர்பான வழக்கில், சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி பரத் பராஷர் இன்று தீர்ப்பளித்தார். ஹெ.சி.குப்தா, நிலக்கரித்துறையின் முன்னாள் இணைச் செயலாளர் கே.எஸ்.குரோபா, நிலக்கரி அமைச்சகத்தில் இயக்குநராகப் பணியாற்றிய கே.சி.சம்ரியா, மற்றும் விகாஸ் மிட்டல்ஸ் அண்ட் பவர்ஸ் என்ற தனியார் நிறுவனத்தின் அதிகாரிகள் இருவரை குற்றவாளிகள் என நீதிபதி அறிவித்தார்.

குற்றவாளிகள் ஐந்து பேரையும் நீதிமன்றக் காவலில் அடைக்குமாறு காவல்துறையினருக்கு நீதிபதி உத்தரவிட்டார். அவர்களுக்கான தண்டனை விபரம், வரும் 3ம் தேதி அறிவிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.    

மேற்கு வங்க மாநிலம், மொய்ரா, மதுஜோரே ஆகிய இடங்களில் மேற்குறிப்பிட்ட அதிகாரிகளின் துணையுடன், நிலக்கரிச் சுரங்கங்களை விகாஸ் மிட்டல்ஸ் நிறுவனம் முறைகேடான வழிகளில் பெற்றுக் கொண்டதாக குற்றம்சாட்டப்பட்டிருந்தது. இதுதொடர்பாக கடந்த 2012ம் ஆண்டில் இருந்து சிபிஐ விசாரணை நடத்தி வந்த நிலையில் தற்போது தீர்ப்பு வெளியாகியுள்ளது.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP