தலைமை நீதிபதி வழக்கு: புகார் அளித்த பெண் இல்லாமல் விசாரணை நடத்தக்கூடாது- நீதிபதி சந்திரசூட்

தலைமை நீதிபதிக்கு எதிராணா வழக்கின் விசாரணையில், புகார் அளித்த பெண் இல்லாமல் விசாரணை நடத்தினால் நீதித்துறையின் நம்பகத்தன்மை பாதிக்கப்படும் என்று உச்ச நீதிமன்ற நீதிபதி சந்திரசூட் தெரிவித்துள்ளார்.
 | 

தலைமை நீதிபதி வழக்கு: புகார் அளித்த பெண் இல்லாமல் விசாரணை நடத்தக்கூடாது- நீதிபதி சந்திரசூட்

தலைமை நீதிபதிக்கு எதிரான வழக்கில், புகார் அளித்த பெண் இல்லாமல் விசாரணை நடத்தினால், அது நீதித்துறையின்  நம்பகத்தன்மையை பாதிக்கும் என்று உச்ச நீதிமன்ற நீதிபதி சந்திரசூட் தெரிவித்துள்ளார். 

தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்தாக உச்சநீதிமன்றத்தின் முன்னாள் பெண் ஊழியர் ஒருவர் புகார் அளித்தார். அதனடிப்படையில், நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையில், நீதிபதிகள் ரோஹிந்தன் நாரிமன், தீபக் குப்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக உச்ச நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. 

அதில் ஒரு பகுதியாக, தலைமை நீதிபதி மீது, பெண் ஊழியர் அளித்த புகாரின் உண்மைத்தன்மையை ஆராய, மூத்த நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையில் என்.வி.ரமணா, இந்திரா பானர்ஜி ஆகிய 3 பேர் கொண்ட சிறப்பு விசாரணைக்குழுவை அமைத்து உத்தரவிட்டது நீதிமன்றம். இந்தக் குழுவிலிருந்து நீதிபதி ரமணா விலகுவதாக அறிவிக்கவே, அவருக்கு பதிலாக நீதிபதி இந்து மல்கோத்ரா இடம்பெற்றுள்ளார். 

இந்த நிலையில், உச்ச நீதிமன்ற நீதிபதி சந்திரசூட், இந்த விசாரணைக்குழுவை சந்தித்து பேசியுள்ளார். புகார் அளித்த பெண் இல்லாமல் விசாரணைக்குழு, விசாரணையை நடத்தக்கூடாது. அவ்வாறு நடத்தும் பட்சத்தில், நீதித்துறையின் நம்பகத்தன்மை பாதிக்கப்படும் என்று அறிவுறுத்தியுள்ளார். 

நீதிபதி சந்திரசூட், இன்னும் இரண்டு ஆண்டுகளில் அதாவது 2022-24ம் ஆண்டுகளில் தலைமை நீதிபதியாக நியமிக்கப்படும் தகுதியை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP