பணிஓய்வு பெறும் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் - நீதிமன்றத்தில் இன்று கடைசி நாள்!!!

வரும் நவம்பர் 17ஆம் தேதி பணிஓய்வு பெறும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிமன்றத்தில் அமரும் கடைசி நாளான இன்று, 4 நிமிட விசாரணையில் ஈடுபட்டிருந்ததுடன், 10 அறிவிப்புகளையும் முன் வைத்திருந்தார்.
 | 

பணிஓய்வு பெறும் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் - நீதிமன்றத்தில் இன்று கடைசி நாள்!!!

வரும் நவம்பர் 17ஆம் தேதி பணிஓய்வு பெறும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிமன்றத்தில் அமரும் கடைசி நாளான இன்று, 4 நிமிட விசாரணையில் ஈடுபட்டிருந்ததுடன், 10 அறிவிப்புகளையும் முன் வைத்திருந்தார்.

கடந்த 2018ஆம் ஆண்டு அக்டோபர் 3ஆம் தேதி உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதிவியேற்ற ரஞ்சன் கோகாய், அயோத்தியா வழக்கு, ரஃபேல் போர் விமான வழக்கு, சபரிமலை பெண்கள் அனுமதி குறித்த வழக்கு, தகவல் அறியும் சட்டத்தின் கீழ் தலைமை நீதிபதி அலுவலகம் வழக்கு போன்ற பல முக்கிய வழக்குகளில் தீர்ப்பு வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில், வரும் 17ஆம் தேதியுடன் பணிஓய்வு பெறவிருக்கும் அவர், உச்ச நீதிமன்றத்தில் தனது கடைசி நாளான இன்று  4 நிமிட விசாரணையிலும், 10 அறிவிப்புகளிலும் ஈடுபட்டிருந்தார். இதை தொடர்ந்து, பார் கவுன்சில் நீதிபதிகளுக்கு தனிபட்ட முறையில் ஓர் கோரிக்கையும் முன் வைத்திருந்தார் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்.

"வழக்குகளை விசாரிக்கும்போது நீதிபதிகள் அமைதி காக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்த அவர், பேசவே வேண்டாம் என்பது தனது கருத்தல்ல என்றும், தேவைக்கு மட்டும் பேசுவதே அந்த இடத்திற்கான தூய்மையை பரைசாற்றும் விதமாக இருக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார். 

மேலும், அவரது பணிஓய்வு நெருங்கி கொண்டிருக்கும் நேரத்தில் பத்திரிகையாளர்கள் பலரும் அவரிடம் பலவிதமான கேள்விகளை முன்வைத்து கொண்டிருக்கும் நிலையில், அடிக்கடி மீடியாவில் தோன்றுவதை விட, மக்களின் நம்பிக்கையை பெறுவதையே தான் உயர்வாக கருவதாக குறிப்பிட்டுள்ளார்.

இதை தொடர்ந்து, இத்தனை ஆண்டுகளை வெற்றிகரமாக கடந்து தற்போது பணிஓய்வு பெறும் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாயிற்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்ததுடன், உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரித்த அவருக்கு நன்றியும் தெரிவித்துள்ளார் உச்ச நீதிமன்ற பார் சங்கத்தின் தலைவரான ராகேஷ் கண்ணா.

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP