சிதம்பரம் முன்ஜாமீன் மனு: நாளை மறுநாள் விசாரணை ?

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில், முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனு வரும் வெள்ளிக்கிழமை உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 | 

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் சிதம்பரத்தின் மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் நேற்று நிராகரித்ததை தொடர்ந்து, உச்சநீதிமன்றத்தில் சிதம்பரம் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. 

முன்ஜாமீன் மனு பட்டியலிடப்படவில்லை என நீதிபதி ரமணா அமர்வு அவசரமாக விசாரிக்க மறுத்திருந்தது. மனுவை இன்று விசாரிக்குமாறு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியிடம் சிதம்பரம் தரப்பு முறையிடவில்லை.

இந்த நிலையில், ப.சிதம்பரத்தின் முன்ஜாமீன் நாளை மறுநாள் விசாரணைக்கு வரவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. உச்சநீதிமன்றம் எந்த உத்தரவையும் பிறப்பிக்காததால் சிதம்பரத்தை கைது செய்ய தடை ஏதுமில்லை. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP