சமூக ஊடகங்களில் குற்றங்களை தடுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: உச்ச நீதிமன்றம்

சமூக ஊடக கணக்குளுடன் ஆதாரை இணைக்கக்கோரிய வழக்கில் சமூக ஊடகங்களுக்கான ஒரு குறிப்பிட்ட வழிகாட்டுதலை உருவாக்குமாறு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 | 

சமூக ஊடகங்களில் குற்றங்களை தடுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: உச்ச நீதிமன்றம்

சமூக ஊடக கணக்குளுடன் ஆதாரை இணைக்கக் கோரிய வழக்கில் சமூக  ஊடகங்களுக்கான ஒரு குறிப்பிட்ட வழிகாட்டுதலை உருவாக்குமாறு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

எதிர்காலத்தில் சமூக ஊடகங்களுடன் ஆதாரை இணைக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நல மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை எதிர்த்து முகநூல் நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தது. இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தபோது, சமூக ஊடகங்களை தவறாகப்பயன்படுத்துவதை தடுக்க மத்திய அரசு ஒரு குறிப்பிட்ட வழிகாட்டுதலை வடிவமைக்க வேண்டும் என்றும், அது குறித்த அறிக்கையை 21 நாட்களுக்குள் நீதிமன்றத்தில் சமர்பிக்க வேண்டும் என்றும் மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.

மேலும், ஆன்லைன் குற்றங்களைத் தோற்றுவிப்பவர்களைக் கண்டுபிடிப்பதற்கான தொழில்நுட்பம் எங்களிடம் இல்லை என்று கூறி தப்பிக்கமுடியாது எனவும், குற்றங்களை செய்ய ஒரு தொழில்நுட்பம் இருந்தால், அதை தடுக்கவும் ஒரு தொழில்நுட்பம் இருக்கும் என உச்ச நீதிமன்றம் கூறியது. 

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP