சிபிஐ இயக்குநர் நியமனத்தை எதிர்த்து வழக்கு!

மத்தியப் புலனாய்வு அமைப்பின் (சிபிஐ) இடைக்கால இயக்குநராக எம்.நாகேஸ்வர ராவ் நியமிக்கப்பட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. பிரபல வழக்குரைஞர் பிரசாந்த் பூஷண் இந்த வழக்கை தொடர்ந்துள்ளார்.
 | 

சிபிஐ இயக்குநர் நியமனத்தை எதிர்த்து வழக்கு!

மத்தியப் புலனாய்வு அமைப்பின் (சிபிஐ) இடைக்கால இயக்குநராக எம்.நாகேஸ்வர ராவ் நியமிக்கப்பட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒன்றின் சார்பில் பிரபல வழக்குரைஞர் பிரசாந்த் பூஷண் இந்த வழக்கை தொடர்ந்துள்ளார்.

சிபிஐ இயக்குநராக இருந்த அலோக் வர்மா மற்றும் சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானா மீது லஞ்ச குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து இருவரையும் மத்திய அரசு கட்டாய விடுப்பில் அனுப்பியது.

இதன் தொடர்ச்சியாக, பிரதமர் மோடி தலைமையிலான உயர்நிலைக் குழு, அலோக் வர்மாவை சிபிஐ இயக்குநர் பதவியிலிருந்து நீக்கி,  அவரை தீயணைப்புத் துறைக்கு மாற்றி அண்மையில் உத்தரவிட்டது.

தன் மீதான லஞ்ச குற்றச்சாட்டு தொடர்பாக சிபிஐ தொடர்ந்துள்ள வழக்கை ரத்து செய்யக் கோரி, ராகேஷ் அஸ்தானா டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.

இந்த நிலையில், சிபிஐ-யின் இடைக்கால இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ள நாகேஸ்வர ராவின் நியமனத்தை ரத்து செய்யக் கோரி, உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

newstm.in

 

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP