கொல்கத்தா காவல் ஆணையரிடம் திணறத் திணற சிபிஐ விசாரணை!

சாரதா நிதி நிறுவன மோசடி தொடர்பாக, கொல்கத்தா மாநகர காவல் ஆணையர் ராஜீவ் குமாரிடம், சிபிஐ அதிகாரிகள் மேகாலயா மாநிலம், ஹில்லாங்கில் மூன்றாவது நாளாக இன்று கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொண்டனர்.
 | 

முன்னதாக அவரிடம் நேற்று முன்தினம் ஒன்பது மணி நேரம் சிபிஐ விசாரணை மேற்கொண்டது. நேற்றும் ராஜீவ் குமாரிடம் பல மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது.

இதேபோன்று, இந்த வழக்கு தொடர்பாக திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.பி. குணல் கோஷிடமும், இரண்டாவது நாளாக சிபிஐ அதிகாரிகள் ஷில்லாங்கில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வழக்கு தள்ளுபடி: இதனிடையே, சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கின் விசாரணையை நீதிமன்ற கண்காணிப்பின்கீழ் நடத்த வேண்டும் எனக் கோரி, முதலீட்டாளர்கள்  தாங்கள் செய்த மனுவை உச்சநீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP