சாரதா நிதி நிறுவன மோசடி: நளினி சிதம்பரம் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல்

சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் மனைவியும், மூத்த வழக்குரைஞருமான நளினி சிதம்பரம் மீது, கொல்கத்தா சிறப்பு நீதிமன்றத்தில் சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.
 | 

சாரதா நிதி நிறுவன மோசடி: நளினி சிதம்பரம் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல்

சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் மனைவியும், மூத்த வழக்குரைஞருமான நளினி சிதம்பரம் மீது, கொல்கத்தா சிறப்பு நீதிமன்றத்தில் சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.

கவர்ச்சிகரமான வட்டி விகிதங்களை அறிவித்து, வாடிக்கையாளர்களிடமிருந்து  2,500 கோடி ரூபாய் அளவுக்கு பணத்தை பெற்றுக் கொண்டு, அதனை திரும்ப தராமல் சராதா நிதி நிறுவனம் மோசடியில் ஈடுபட்டது. மேற்கு வங்க மாநிலத்தில் நடைபெற்ற இந்த நிதி நிறுவன மோசடி நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதையடுத்து, உச்சநீதிமன்ற உத்தரவின் பேரில் கடந்த 2014 -ஆம் ஆண்டு முதல் இந்த வழக்கை விசாரித்து வரும் சிபிஐ, இதுவரை ஐந்து குற்றப்பத்திரிகைகளை தாக்கல் செய்திருந்தது.

அதோடு கூடுதலாக, தற்போது இவ்வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் மனைவியும், மூத்த வழக்குரைஞருமான நளினி சிதம்பரம் மீது, கொல்கத்தா சிறப்பு நீதிமன்றத்தில் சிபிஐ குற்றப் பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.

இதுகுறித்து சிபிஐ-யின் செய்தித் தொடர்பாளர் அபிஷேக் தயாள் கூறும்போது, "சாரதா நிதி நிறுவனத்தில் மக்கள் செய்துள்ள முதலீட்டு தொகைகளை வேறு வழிகளில் தவறாக பயன்படுத்துவது தொடர்பான சதிச் செயலில், இந்நிறுவனத்தின் உரிமையாளர் சுதிப்தா சென் உள்ளிட்டோருடன் சேர்ந்து நளினி சிதம்பரம் ஈடுபட்டுள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

மேலும், செபி, நிறுவன விவகாரங்கள் துறை உள்ளிட்டவை இவ்வழக்கு விசாரணையை கண்டுகொள்ளாமல் இருக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளவதற்காக, சாரதா நிதி நிறுவனத்தின் நிர்வாகத்திடமிருந்து நளினி சிதம்பரம் 1.4 கோடி ரூபாய்  பெற்று கொண்டுள்ளதும் தெரிய வந்துள்ளது" என தயாள் தெரிவித்தார்.

newstm.in
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP