ப.சிதம்பரம் ஜாமீன் மனு: சிபிஐ பதிலளிக்க உத்தரவு

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரம் தாக்கல் செய்துள்ள ஜாமீன் மனு தொடர்பாக சிபிஐ பதிலளிக்க டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 | 

ப.சிதம்பரம் ஜாமீன் மனு: சிபிஐ பதிலளிக்க உத்தரவு

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரம் தாக்கல் செய்துள்ள ஜாமீன் மனு தொடர்பாக சிபிஐ பதிலளிக்க டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் சிபிஐயால் கைது செய்யப்பட்டு தற்போது, நீதிமன்ற காவலில் திகார் சிலையில் உள்ளார். இந்நிலையில் ஜாமீன் கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் தாக்கல் செய்த மனு இன்று விசாரணைக்கு வந்தது.  

மனுவை விசாரித்த நீதிபதி, இங்கு ஏன் நேரடியாக வந்தீர்கள் என கேள்வி எழுப்பினார். அதற்கு ப.சிதம்பரம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், நீதிமன்ற காவலை எதிர்த்தும், எங்கள் தரப்பு நியாயங்களை எடுத்து வைக்கவுமே இங்கு வந்துள்ளதாக தெரிவித்தார். இதையடுத்து, ப.சிதம்பரத்தின் ஜாமீன் தொடர்பாக 7 நாட்களில் பதிலளிக்குமாறு சிபிஐக்கு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. 

Newstm.in

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP