எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை ஆறப்போடுவதா?: உச்சநீதிமன்றம் கண்டனம்

எம்.பி., எம்எல்ஏ.க்கள் மீதான குற்ற வழக்குகளை முன்னுரிமை அடிப்படையில் விரைந்து விசாரித்து முடிக்க வேண்டுமென உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மாஜிஸ்டிரேட் நீதிமன்றங்களும் இவ்வழக்குகளை விசாரிக்கலாம் எனவும் நீதிபதிகள் கூறினர்.
 | 

எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை ஆறப்போடுவதா?: உச்சநீதிமன்றம் கண்டனம்

எம்.பி., எம்எல்ஏ.க்கள் மீதான குற்ற வழக்குகளை ஆறப்போடாமல், முன்னுரிமை அடிப்படையில் விரைந்து விசாரித்து முடிக்க வேண்டுமென உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குற்ற வழக்குகளில் தண்டனை பெறும் அரசியல்வாதிகளுக்கு, வாழ்நாள் முழுவதும் அரசியலில் ஈடுபட தடை விதிக்கக் கோரி, பாஜக தலைவர் அஸ்வினி குமார் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய்,  நீதிபதிகள் சஞ்சய் கிருஷன் கௌல், கே.எம். ஜோசப் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் இன்று (செவ்வாய்க்கிழமை) விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

"லாமேக்கர்" எனப்படும் எம்.பி., எம்எல்ஏ.க்கள் மீது கொலை குற்றச்சாட்டுகள் தொடர்பாக  மட்டும் 430 வழக்குகள், நாடு முழுவதும் பல்வேறு நீதிமன்றங்களில் தற்போது நிலுவையில் உள்ளன. எனவே, அவர்கள் மீதான குற்ற வழக்குகளை ஆறப்போடாமல், முன்னுரிமை அடிப்படையில் சிறப்பு நீதிமன்றங்கள் விரைந்து விசாரிக்க வேண்டும்.

அத்துடன், மக்கள் பிரதிநிதிகள் மீதான பல்வேறு வழக்குகளை விரைந்து முடிக்கும் வகையில்,  அவற்றை மாஜிஸ்டிரேட் மற்றும் மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றங்களுக்கு உயர்நீதிமன்றங்கள் ஏன் ஒதுக்கக்கூடாது? எனவும் நீதிபதிகள் கேள்வியெழுப்பினர்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP