பாஜக ரத யாத்திரை விவகாரம்: மேற்குவங்க அரசு பதிலளிக்க உத்தரவு

மேற்குவங்க மாநிலத்தில் பாஜக ரதயாத்திரை நடத்த அனுமதிக்க உத்தரவிட கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு பதிலளிக்க, அந்த மாநில அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 | 

மேற்குவங்க மாநிலத்தில் கடந்த மாதம் மூன்று தேதிகளில் ரதயாத்திரை நடத்த  பாஜக திட்டமிடப்பட்டிருந்தது. இதனால் மாநிலத்தின் சட்டம் -ஒழுங்கு பாதிக்கும் எனக் கூறி, மேற்குவங்க அரசு சார்பில் கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. 

இந்த மனுவை தள்ளுபடி செய்து தனி  நீதிபதி அமர்வு உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை விசாரித்த கொல்கத்தா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு, ரதயாத்திரைக்கு தடைவிதித்து உத்தரவிட்டது.

 கொல்கத்தா உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து , பாஜக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.

இந்த மனுவை இன்று விசாரணைக்கு எடுத்துக்கொண்ட உச்சநீதிமன்றம், இதுதொடர்பாக மேற்குவங்க  மாநில அரசை பதிலளிக்குமாறு உத்தரவிட்டு, இந்த வழக்கின் விசாரணையை வரும் 15-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP