அயோத்தி வழக்கில் இன்று தீர்ப்பு 

அயோத்தியில் ஸ்ரீ ராமஜன்ம பூமி நில உரிமம் தொடர்பான வழக்கில் இன்று காலை 10.30 மணிக்கு உச்சநீதிமன்றம் தீர்ப்பளிக்கிறது. தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு தீர்ப்பளிக்கவுள்ளது.
 | 

அயோத்தி வழக்கில் இன்று தீர்ப்பு 

ராமஜென்மபூமி அமைந்துள்ள குறிப்பிட்ட பகுதியில் உள்ள நிலம் யாருக்கு சொந்தம் என்ற வழக்கில், இன்று காலை 10.30 மணிக்கு உச்சநீதிமன்றம் தீர்ப்பளிக்கிறது. தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு தீர்ப்பளிக்கவுள்ளது.

அலகாபாத் உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு எதிரான 14 மேல்முறையீட்டு மனுக்களை விசாரித்த உச்சநீதிமன்றம் தீர்ப்பளிக்கிறது. நீதிபதிகள் ரஞ்சன் கோகாய், எஸ்.ஏ.பாப்டே, சந்திரசூட், அசோக் பூசண், அப்துல் நசீர் அமர்வு வழக்கை விசாரித்தது. சுமூகதீர்வு காண அமைக்கப்பட்ட மத்தியஸ்த குழுவின் முயற்சி தோல்வியில் முடிந்ததால் நீதிமன்றம் தீர்ப்பளிக்கிறது.

அயோத்தி வழக்கின் பின்னணி

அயோத்தியில் ராமஜென்மபூமி - பாபர் மசூதி அமைந்துள்ள குறிப்பிட்ட பகுதியில் உள்ள 2.77 ஏக்கர் நிலத்திற்கு 3 அமைப்புகள் உரிமை கோரியிருந்தன. சன்னி வக்பு வாரியம், நிர்மோகி அகாரா, ராம் லல்லா அமைப்புகள் நிலத்தை சமமாகப் பகிர 2010ஆம் ஆண்டு செப்டம்பர் 30ஆம் தேதி அலகாபாத் உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அலகாபாத் உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து 14 மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP