அயோத்தி வழக்கு பிப்.26ல் விசாரிப்பு! - உச்சநீதிமன்றம்

அயோத்தி தொடர்பான வழக்கு வருகிற பிப்ரவரி 26ம் தேதி விசாரிக்கப்படும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இவ்வழக்கு நீதிபதிகள் ரஞ்சன் கோகோய், சந்திரசூட், அசோக் பூஷன், அப்துல் நசீர்,எஸ்.ஏ.போப்டே ஆகிய 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
 | 

அயோத்தி வழக்கு பிப்.26ல் விசாரிப்பு! - உச்சநீதிமன்றம்

அயோத்தி ராமஜன்மபூமி உரிம விவகாரம் தொடர்பான வழக்கு வருகிற பிப்ரவரி 26ம் தேதி விசாரிக்கப்படும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 

உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள  ராமஜென்ம பூமி மீதான உரிமை இந்து இயக்கங்கள் கோரி வருகின்றன. 

2.77 ஏக்கர் பரப்பளவிலான இந்த நிலம் தொடர்பான வழக்கில், சன்னி வக்ப் வாரியம், நிர்மோஹி அக்ஹாரா மற்றும் ராம் லாலா அமைப்பினர் ஆகிய மூன்று தரப்பினரும் நிலத்தை சரிசமமாக பகிர்ந்து கொள்ளலாம் என அலகாபாத் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இந்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் பல்வேறு தரப்பினரும் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்துள்ளனர்.

அதன்படி, அயோத்தியில் இந்த குறிப்பிட்ட இடம் யாருக்குச் சொந்தம்? என்பது தொடர்பான வழக்கை விசாரிக்க தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையில் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு நியமிக்கப்பட்டுள்ளது. 

இதன் மீதான விசாரணை கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற நிலையில், மீண்டும் விசாரணை வருகிற பிப்.26ம் தேதி நடைபெறும்  என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இவ்வழக்கு நீதிபதிகள் ரஞ்சன் கோகோய், சந்திரசூட், அசோக் பூஷன், அப்துல் நசீர், எஸ்.ஏ.போப்டே ஆகிய 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP