ஆர்.டி.ஐ. சட்டத்தின் கீழ் தலைமை நீதிபதி அலுவலகமும் வரும்: உச்சநீதிமன்றம் தீர்ப்பு 

தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அலுவலகமும் வரும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
 | 

ஆர்.டி.ஐ. கீழ் தலைமை நீதிபதி அலுவலகம் வரும் என கடந்த 2010ஆம் ஆண்டு டெல்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்ற செயலாளர், தகவல் தொடர்பு அதிகாரி ஆகியோர் மேல்முறையீடு செய்திருந்தனர்.

இந்த நிலையில், இந்த வழக்கில், தலைமை நீதிபதியின் அலுவலகம் ஆர்.டி.ஐ. வரம்புக்குள் வரும் என்ற டெல்லி உயர்நீதிமன்றத்தின் உத்தரவை உறுதி செய்து, உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.  நீதித்துறையின் வெளிப்படைத் தன்மையை நிலை நிறுத்துவதற்காக இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. அரசியல் சாசன அமர்வில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் உள்பட 3 நீதிபதிகள் ஒரே தீர்ப்பை வழங்கினர். 

கடந்த 2010 ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட சட்டத்தில் பிரதமர் அலுவலகம் உள்பட அனைத்து துறைகளும் ஆர்டிஐ கீழ் வந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP