அயோத்தி வழக்கில் மத்தியஸ்தம் குறித்து நாளை தீர்ப்பு

அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவது தொடர்பான வழக்கில், இரண்டு தரப்புக்கும் இடையே மத்தியஸ்தம் செய்ய ஒருவரை நியமிப்பது குறித்து நாளை உச்ச நீதிமன்றம் இறுதி தீர்ப்பை வழங்க இருக்கிறது.
 | 

அயோத்தி வழக்கில் மத்தியஸ்தம் குறித்து நாளை தீர்ப்பு

அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவது தொடர்பான வழக்கில், இரண்டு தரப்புக்கும் இடையே மத்தியஸ்தம் செய்ய ஒருவரை நியமிப்பது குறித்து நாளை உச்ச நீதிமன்றம் இறுதி தீர்ப்பை வழங்க இருக்கிறது.

அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில், ராமர் கோவில் கட்டுவது தொடர்பான வழக்கு, உச்ச நீதிமன்ற அரசியல் சாசன பென்ச் முன்னிலையில் நடைபெற்று வருகிறது. இந்த விவகாரத்தில் இரண்டு தரப்புமே மத்தியஸ்தம் செய்வது குறித்து அதிருப்தி தெரிவித்துள்ளன. ஆனால் பாபர் மசூதி கட்டுவதற்காக வாதிடும் சன்னி வக்ஃப் போர்டு மத்தியஸ்தம் செய்ய தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளது.

ஆனால், ராமர் கோவில் கட்ட வேண்டுமென கோரும் இந்து தரப்பு மனுதாரர்கள், உ.பி அரசு, ஆகியோர் மத்தியஸ்தம் செய்வதில் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், இதுகுறித்து விசாரித்து வந்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அரசியல் சாசன பெஞ்ச், இந்த வழக்கை சமரசம் செய்வது இரண்டு தரப்புக்கும் இடையே உள்ள உறவை சீர்படுத்துவதற்கு உதவும் என்று கூறினார்.

"இந்த வழக்கு ஒரு பொருளைப் பற்றியது அல்ல. மனங்களையும், காயங்களையும் குணப்படுத்துவது குறித்ததாகும். சமரசம் ஏற்பட ஒரு சதவீதம் வாய்ப்பிருந்தால், பேச்சுவார்த்தைகள் நடைபெற வேண்டும்" என்று நீதிமன்றம் கூறியது. இந்த நிலையில் நாளை மத்தியஸ்தம் செய்வது தொடர்பாக இறுதி முடிவு எடுக்க உத்தரவு பிறப்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP