ஜேட்லிக்கு எதிராக வழக்கு தொடுத்தவருக்கு ரூ.50,000 அபராதம் - உச்சநீதிமன்றம் அதிரடி

நிதியமைச்சர் அருண் ஜேட்லி எதிராக வழக்கு தொடுத்த வழக்கறிஞருக்கு உச்சநீதிமன்றம் ரூ.50,000 அபராதம் விதித்தது. அந்தத் தொகையை செலுத்தும் வரையில் அவரிடம் இருந்து பொதுநல மனு எதையும் பெறக் கூடாது என நீதிமன்ற பதிவாளருக்கு உத்தரவிடப்பட்டது.
 | 

ஜேட்லிக்கு எதிராக வழக்கு தொடுத்தவருக்கு ரூ.50,000 அபராதம் - உச்சநீதிமன்றம் அதிரடி

ரிசர்வ் வங்கியின் உபரி பணத்தை அபகரிக்க முயன்றதாக நிதியமைச்சர் அருண் ஜேட்லிக்கு எதிராக குற்றம்சாட்டி உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடுத்த பிரபல வழக்கறிஞருக்கு ரூ.50,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான மனுவையும் உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

ரிசர்வ் வங்கியிடம் ரூ.9.56 லட்சம் கோடி இருப்புத் தொகையாக உள்ளது. அதில், ரூ.3.6 லட்சம் கோடியை மத்திய அரசுக்கு வழங்குமாறு நிதியமைச்சகம் வலியுறுத்தியதாக அண்மையில் செய்திகள் வெளியாகின. ஆனால், அது பொய்யான தகவல் என்று மத்திய அரசு விளக்கம் அளித்திருந்தது.

இந்நிலையில், பொதுநல விவகாரங்கள் குறித்து பல்வேறு வழக்குகளை தொடுத்தவரான வழக்கறிஞர் எம்.எல்.சர்மா, இந்த விவகாரம் தொடர்பாகவும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். ரிசர்வ் வங்கியின் பணத்தை அபகரித்து பெரும் நிறுவனங்களின் கடனை தள்ளுபடி செய்ய ஜேட்லி திட்டமிட்டிருந்ததாக அவர் குற்றம்சாட்டியிருந்தார்.

அந்த மனு, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதி எஸ்.கே.கௌல் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக இன்று பரிசீலனைக்கு வந்தது. அப்போது, “இந்த மனுவை பொதுநல வழக்காக ஏற்பதற்கான எந்தக் காரணத்தையும் கண்டறிய முடியவில்லை. நிதியமைச்சரை நாங்கள் கட்டுப்படுத்த வேண்டும் என மனுதாரர் விரும்புகிறார். நீங்கள் (மனுதாரர்) சில நல்ல விஷயங்களை செய்திருக்கிறீர்கள். உங்கள் மீதான நம்பகத்தன்மையை ஏன் குறைத்துக் கொள்கிறீர்கள்?” என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

மேலும், வழக்கறிஞர் சர்மாவுக்கு ரூ.50,000 அபராதம் விதித்ததுடன், அந்தத் தொகையை செலுத்தும் வரையில் அவர் சார்பிலான எந்தவொரு பொதுநல மனுவையும் பெறக் கூடாது என்று உச்சநீதிமன்றப் பதிவாளருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP